Monday 27 August 2018

27 ஆகஸ்ட் முக்கிய நிகழ்வுகள்

உலகம்

வியட்நாம் போர் ஹீரோ, அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கெயின் காலமானார்

வியட்நாம் போரில் சிறை சென்றவரும், அமெரிக்க அதிபர் பதவிக்கு இருமுறை போட்டியிட்டவரும், அரிசோனா மாநில செனட் உறுப்பினருமான ஜான் மெக்கெயின் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 81

ஜான் மெக்கெயினுக்கு மூளைப் புற்றுநோயான கிளிபோஸ்டோமா எனும் நோய் கடந்த 2017 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உள்ளூர் நேரப்படி மாலை 4.28 மணிக்குக் காலமானார்.

இந்தியா


நவீன விவசாயத் தொழில்நுட்பத்தை அறிந்துவர ஜார்க்கண்ட் விவசாயிகள் இஸ்ரேல் பயணம்

இஸ்ரேலுக்குச் சென்று நவீன விவசாய தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்காக ஜார்கண்ட் விவசாயப் பிரதிநிதிகள் 26 பேரை அம்மாநில முதல்வர் ரகுவர் தாஸ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழியனுப்பி வைத்தார்.
ஜார்க்கண்டில் பாசன வசதி இல்லாத பகுதிகள் அதிகம் என்பதால் அங்குள்ள விவசாயிகள், சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது, மேலும் இஸ்ரேலிலும் இப்பிரச்சினை மிகப்பெரிய அளவில் உள்ளது. ஆனால் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீர்ப்பாசன பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்துள்ளார். இதனால் அங்கு விவசாயத்தை, வெற்றியடைந்த தொழிலாக மாற்றிக்காட்டியிருக்கிறார்கள்.

மேகாலயா இடைத் தேர்தல்: முதல்வர் கான்ட்ராட் சங்மா வெற்றி

மேகாலயாவில் நடந்த இடைத் தேர்தலில் முதல்வர் கான்ராட் சங்மா வெற்றி பெற்றார்.
மேகாலயா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில், காங்கிரஸ் 21 தொகுதிகள் வென்றது. பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக மற்றும் மாநில கட்சிகளின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி ஆட்சியமைத்தது. மக்களவை முன்னாள் சபாநாயகர் பிஏ சங்மாவின் மகனும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா, முதல்வராக பதவியேற்றார்.

விளையாட்டு


ஆசிய விளையாட்டுப் போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 வெள்ளிப் பதக்கம்

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு நேற்று 2 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. இதேபோல மகளிர் 100 மீட்டர், 400 மீட்டர் ஆடவர், மகளிர் பிரிவில் 3 வெள்ளிப் பதக்கங்கள் என ஒரே நாளில் இந்தியா 5 வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றியது.
ஆசிய விளையாட்டுப் போட்டி கள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலேம்பங் நகரங்களில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆடவர் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் முகமது அனாஸ் 45.69 விநாடிகளில் பந்தய தூரத்தை எட்டி 2-வது இடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
கத்தார் நாட்டைச் சேர்ந்த வீரர் ஹசன் அப்தலேலா 44.89 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடத்து தங்கம் வென்றார்.

வணிகம்


ரூ.3,80,000 கோடி வாராக்கடன் தீர்வு நடவடிக்கை: ஆர்பிஐ காலக்கெடு இன்றுடன் முடிவதால் வங்கிகளுக்கு கடும் நெருக்கடி

வங்கிகளின் வாராக்கடன் கணக்கு களில் சுமார் 70 பெரிய கணக்குகளில் ரூ.3,80,000 கோடி ரூபாயைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக் கைகளை வங்கிகள் மேற்கொள் வதற்கு ரிசர்வ் வங்கி விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடை கிறது.
எனவே இந்தக் கணக்குகளுக்கு எதிராக திவால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் வாய்ப்புகள் உரு வாகியுள்ளன. இதனால் வங்கி அதிகாரிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி-12 அன்று வெளியான ரிசர்வ் வங்கி சுற் றறிக்கையில் பெரிய கணக்கு களில் பணத்தை செலுத்துவதற்கு ஒருநாள் தாமதமாகி இருந்தாலும் அதனை வாராக்கடனாக மாற வாய்ப்புள்ள கணக்கு எனத் தீர்மானித்து, இவற்றுக்கான வாராக் கடன் தீர்வு நடவடிக்கை திட்டங் களை 180 நாட்களுக்குள் செயல் படுத்தவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதற்கான காலக்கெடு மார்ச்-1 முதல் ஆரம்பமாவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது.

டிசம்பர் 31-க்குள் சிப் பொருத்திய டெபிட் கார்டு:எஸ்பிஐ அறிவிப்பு

காந்தப் பட்டை கொண்ட டெபிட் கார்டினை மாற்றி சிப் பொருத்தப் பட்ட டெபிட் கார்டினை பெற் றுக் கொள்ள வேண்டும் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தங்களது வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மோசடிகளைத் தடுக்கும் வகை யில் சிப் பொருத்தப்பட்ட டெபிட் மற்றும் கடன் அட்டைகளை மட்டு மே வங்கிகள் தங்களது வாடிக்கை யாளர்களுக்கு வழங்கவேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந் தது. இந்நிலையில் சிப் பொருத்திய யூரோபே மாஸ்டர்கார்ட் விசா அட்டைகளுக்கு தங்கள் வாடிக்கை யாளர்கள் மாறிக்கொள்ளவேண் டும் என எஸ்பிஐ கூறியுள்ளது.
பாதுகாப்பான முறையில் அட்டைகள் மாற்றித்தரப்படும், அட்டைகளை மாற்றிக்கொள்வ தற்கு எந்தக் கட்டணமும் வசூலிக் கப்படாது எனவும் எஸ்பிஐ தெரி வித்துள்ளது.

No comments:

Post a Comment