Wednesday, 12 September 2018

12th செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்

உலகம்

ஆஸ்திரேலிய கடற்படை ராணுவப் பயிற்சியில் சீனா பங்கேற்பு
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் கூட்டுக் கடற்படை ராணுவப் பயிற்சியில் சீனா உட்பட 27 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியிலுள்ள போர்ட் டார்வினில் 27 நாடுகள் பங்கேற்ற கடற்படை தொடர்பான ராணுவப் பயிற்சியில் சீனா முதல் முறையாகப் பங்கேற்றுள்ளது. இதில் வெவ்வேறு நாடுகளிலிருந்து 3,000 கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர். 23 கப்பல்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டன” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி மூலம் நாடுகளுக்கிடையே நிலவும் வேறுபாடுகள், ஒற்றுமைகள் பரஸ்பரமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. மேலும் இந்தக் கூட்டுப் பயிற்சி நம்பகத்தன்மையை இதில் பங்கேற்ற நாடுகளிடையே அதிகரித்துள்ளது என்று ஆஸ்திரேலிய ராணுவப் படை தெரிவித்துள்ளது.

விளையாட்டு


உலக கேரம் போட்டியில் தமிழக வீரருக்கு 2 வெள்ளி பதக்கம்
தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் சமீபத்தில் 5-வது கேரம் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 38 வயதான கே.சகாயபாரதி, அணி கள் பிரிவிலும், ஓபன் டபுள்ஸ் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். 
இந்தத் தொடரில் இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து சகாயபாரதி மட்டுமே இடம் பெற்றிருந்தார். இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் அவர், 4-வது இடத்தில் உள்ளார்.

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த்
ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ்.பிரணாயி ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.


வணிகம்


இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவு: 72.91 ஆக வீழ்ச்சி
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 22 பைசா சரிவடைந்து 72.91 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. இந்த சரிவு இதுவரை இல்லாத ஒன்றாகும்

உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் சரிவடைந்தது. அதுபோலவே, இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.

No comments:

Post a Comment