Friday 7 September 2018

7th செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்

உலகம்

5- வது பெரிய அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் உருவாகும்: அமெரிக்க அறிக்கையில் தகவல்

உலகின் 5-வது பெரிய அணு ஆயுதங்களை கொண்ட நாடாக பாகிஸ்தான் உருவாகலாம் என்று அமெரிக்கா அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிடம் தற்போது 140 முதல் 150 அணு ஆயுதங்கள் உள்ளன. இது தொடர்ந்தால் இந்த அணுஆயுதங்கள் எண்ணிக்கை 220 முதல் 250 வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'Pakistani nuclear forces 2018' என்ற தலைப்பில் ஹன்ஸ் எம் கிறிஸ்டன்சன், ராபர்ட் எஸ் நோரிஸ், ஜூலி டைமண்ட் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், "பாகிஸ்தானில் 140 முதல் 150 அணு ஆயுதங்கள்வரை உள்ளன. தற்போது 2025 ம் ஆண்டுக்குள் 220 முதல் 250 ஆக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவ தளங்களில் உள்ள சாட்டிலைட் படங்களைஅடிப்படையாக வைத்து இதனை நாங்கள் இதனை தெரிவித்திருக்கிறோம். இவ்வாறு பாகிஸ்தான் முன்னேறினால் இன்னும் சில வருடங்களில் உலகின் ஐந்தவாது பெரிய ஆணுஆயுதங்களை கொண்ட நாடாக மாறும்.

இந்தியா


காஷ்மீர் காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் இடமாற்றம்
ஜம்மு காஷ்மீரின் காவல்துறை தலைவர் பதவியில் இருந்து எஸ்.பி.வைத் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சிறைத்துறையின் இயக்குநர் தில்பக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை மாநில உள்துறையின் முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், ''1986-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான எஸ்.பி.வைத், தற்போது போக்குவரத்து ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தக்க ஏற்பாடுகள் செய்யும்வரை, காவல்துறை தலைவர் பதவிக்கு 1987-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான தில்பக் சிங் பொறுப்பு வகிப்பார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வி; ஜப்பான் வீரர் நிஷிகோரியிடம் வீழ்ந்தார்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் 7-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், ஜப்பானின் நிஷிகோரியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், 21-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரியை எதிர்த்து விளையாடினார். சுமார் 4 மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்ற கடும் போராட்டத்தில் நிஷிகோரி 2-6, 6-4, 7-6 (7-5), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

வணிகம்


ஏர் இந்தியா கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
இந்தியாவின் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா வின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற நிலைக் குழு மத்திய அரசை கேட் டுக் கொண்டுள்ளது.
போக்கு வரத்து, சுற்றுலா மற்றும் கலாசார துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன்களை தள்ளுபடி செய்யவும், அதன் செயல்பாடுகளை சரி செய்து கொள்ள ஐந்து ஆண்டுகள் அவகாசம் அளிக்கலாம் எனவும் பரிந்துரை செய்துள்ளது.
பாஜக உறுப்பினர்கள் கொண்ட இந்த குழு, பங்கு விலக்கலுக்கு எதிராக அரசுக்கு பரிந்துரை அளித் துள்ளது. ஆனால் ஜனவரி மாதத் தில் நடந்த ஏர் இந்தியா பங்கு விலக்கல் கூட்டத்தில் பங்கு விலக்க லுக்கு ஆதரவாக பாஜக இருந்தது. தற்போதைய அறிக்கையில் பங்கு விலக்கலுக்கு எதிரான நிலைப் பாட்டை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment