Friday 7 September 2018

8th செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்


உலகம்

5- வது பெரிய அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் உருவாகும்: அமெரிக்க அறிக்கையில் தகவல்
உலகின் 5-வது பெரிய அணு ஆயுதங்களை கொண்ட நாடாக பாகிஸ்தான் உருவாகலாம் என்று அமெரிக்கா அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிடம் தற்போது 140 முதல் 150 அணு ஆயுதங்கள் உள்ளன. இது தொடர்ந்தால் இந்த அணுஆயுதங்கள் எண்ணிக்கை 220 முதல் 250 வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'Pakistani nuclear forces 2018' என்ற தலைப்பில் ஹன்ஸ் எம் கிறிஸ்டன்சன், ராபர்ட் எஸ் நோரிஸ், ஜூலி டைமண்ட் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்தியா


பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்: டெல்லியில் நாளை தொடக்கம்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்குப் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் முதல்முறையாக நாளை கூடுகிறது.
எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்துக்கு உயர்சாதி மக்கள் எதிர்ப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றுக்கு மத்தியில் இந்த செயற்குழுக் கூட்டம் நடக்க உள்ளது.
டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடக்கும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா தொடக்க நாளில் உரையாற்றுகிறார். அதன்பின் இறுதிநாளில் பிரதமர் மோடி, மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் உரையாற்றுவார்கள் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் பாஜ மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

விளையாட்டு


உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் ஹிருதய் ஹஸாரிகா:  இளவேனில் வெள்ளி பதக்கம் கைப்பற்றினார்
தென் கொரியாவின் சாங் வான் நகரில் 52-வது உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜூனியர் பிரிவில் ஆடவருக் கான 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவின் ஹிருதய் ஹஸாரிகா தங்கப் பதக்கம் வென்றார். இறுதி சுற்றில், 16 வயதான ஹிருதய் ஹஸாரிகாவும், ஈரானின் அமிர் நியோக்னமும் தலாள 250.1 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தனர்
இதனால் வெற்றியை தீர்மானிக்க ஷூட்-ஆப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஹிரு தய் ஹஸாரிகா 10.3 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். 10.2 புள்ளிகள் பெற்ற அமிர் நியோக் னம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி னார். ரஷ்யாவின் கிரிகோரி ஷமகோவ் 228.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
மகளிருக்கான ஜூனியர் பிரி வில் 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தி யாவின் இளவேனில் வாளறிவன் 249.8 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப் பதக்கமும், மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்ரேயா அகர் வால் 228.4 புள்ளிகளுடன் வெண் கலப் பதக்கமும் கைப்பற்றினர். சீனாவின் ஷி மெங்யாவோ 250.5 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இறுதிப் போட்டியில் நுழைந்து ஒசாகா சாதனை
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு ஜப்பானின் நவோமி ஒசாசா முன்னேறினார். இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் ஜப்பான் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் நவோமி ஒசாகா.
ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 20-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, 14-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர்த்து விளையாடினார்.

வணிகம்


எஸ்பிஐ நிர்வாக இயக்குநராக அன்ஷுலா காந்த்
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வாங்கியின் நிர்வாக இயக்குநராக அன்ஷுலா காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கூடுதல் நிர்வாக இயக்குநராக இவர் உள்ளார். முன்னதாக இவரது நியமனத்துக்கு இயக்கு நர் குழு பரிந்துரை செய்திருந்தது.
இவரது ஓய்வு காலம் வரை, 2020-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்த பதவியில் இருப்பார். பொதுமக்கள் குறை தீர்ப்பு அமைச்சகம் இந்த உத்தரவினை வழங்கியுள்ளது.

முதல் இடத்தைத் தக்கவைக்க தீவிரம்: ஜியோமி புதிய போன்களை அறிமுகப்படுத்தியது
சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் மிகக் குறுகிய காலத்திலேயே ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இந்நிலையில், ஸ்மார்ட் போன் விற்பனையில் தனது சந்தையை மேலும் விரிவுபடுத்த தீவிரமாகக் களமிறங்கியுள்ள ஜியோமி புதிதாக மூன்று போன் களை நேற்று சென்னையில் அறி முகம் செய்தது
இந்நிறுவனத்தின் முந்தைய ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் கூடுதல் அம்சங்கள், வசதிகளுடன் வெளியாகியுள்ள இந்த போன்கள், பிற நிறுவனங் களின் போன்களைக் காட்டிலும் குறைவான விலையில் தரப்படு கிறது. ரெட்மி 6, ரெட்மி 6, ரெட்மி 6 புரோ என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்த போன் களின் முதல் வேரியன்ட் விலை முறையே ரூ. 5,999, ரூ. 7,999, ரூ. 10,999. இரண்டாம் வேரியன்ட் போன்கள் முறையே ரூ. 6,999, ரூ. 9,499, ரூ. 12,999க்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment