18th January Current Affairs in Tamil
- காசநோயால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலை (2019) மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உத்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
- இப்பட்டியலில் தமிழகம் 6வது இடத்தில் உள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் தேர்வுக்குச் செல்லும்போது, சொந்த உதவியாளரை (ஸ்கிரைப்) அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதலை UGC (University Grants Commission – பல்கலைக்கழக மானியக் குழு) வெளியிட்டுள்ளது.
- சென்னை மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு, விழா எதுவுமின்றி இன்று (ஜனவரி 17, 2019) திறக்கப்பட்டுள்ளது.
- லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் 2019ம் ஆண்டின் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 49 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.
- பெங்களுரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் 14வது இடத்திலும், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மும்பை 27வது இடத்திலும் உள்ளது.
- டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ரூ.3,600 கோடி செலவில், நாட்டில் 13 புதிய மத்தியப் பல்கலைக்கழகங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜம்மு-காஷ்மீரில் மட்டும் 2 பல்கலைக்கழகங்களும், மற்ற மாநிலங்களில் தலா ஒரு பல்கலைக்கழகமும் அமையவுள்ளது.
- தமிழகத்தில் ஏற்கெனவே 2 மத்திய பல்கலைக்கழகங்கள் (சென்னை, திருவாரூர்) உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைமை செயல் அலுவலராக சிங்கப்பூரின் மானு சாஹ்னி நியமிக்கப்பட்டுள்ளார்.
- டெல்லியில் நடைபெற்ற 17வது டெல்லி சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சிறுவன் குகேஷ் (12 வயது) சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் உலகின் இரண்டாம் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
- 2015 முதலான 3 ஆண்டுகளுக்கு, அமைதிக்கான காந்தி விருதை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- இதில் 2015ம் ஆண்டுக்கான காந்தி விருது, விவேகானந்த கேந்திரத்துக்கு (கன்னியாகுமரி) அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2016ம் ஆண்டுக்கான காந்தி விருதுக்கு அக்ஷய பாத்திரம் அறக்கட்டளை மற்றும் சுலப் இன்டர்நேஷனல் ஆகிய இரு அமைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2017ம் ஆண்டுக்கான காந்தி விருது ஏகாய் அபியான் அறக்கட்டளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2018ம் ஆண்டுக்கான காந்தி விருது யோஹெய் சசாகவா அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- கர்நாடக தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
No comments:
Post a Comment