17th January Current Affairs in Tamil
- ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், அம்மாநிலத்தின் மக்களுக்கு இலவசமாக LED விளக்குகளை வழங்குவதற்காக “ஆமா காரே LED” (Ama Ghare LED) என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
- “புவி அரசியல் மற்றும் புவியுக்திசார்” மாநாடான “ரைசினா உரையாடலின்” (Raisina Dialogue) 4-வது பதிப்பு புதுடெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.
- கருத்துரு :- “உலக மறுசீரமைப்பு : புதிய வடிவியல்களில்; நிலையற்ற கூட்டணிகள்; நிச்சயமற்ற விளைவுகள்”; என்பதாகும்.
- ஆக்ரா (உத்திரப்பிரதேசம்) நகருக்கு தண்ணீர் வழங்குவதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி “Gangaijal Project” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார்.
- 2900 கோடி மதிப்பிலான இத்திட்டம் ஜனவரி 9, 2019 –ல் தொடங்கப்பட்டது.
- 10 –வது “உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடானது”, அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜூலை 4, 2019 அன்று நடைபெறவுள்ளது.
- முதல் “உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு” மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment