19th January Current Affairs in Tamil
- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் – ஓமலூர் பிரதான சாலைக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்டியுள்ளார்.
- குஜராத் மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. அவ்வகையில் 9வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கி, மூன்று நாட்கள்(ஜனவரி 18 முதல் 20 வரை) நடைபெற உள்ளது.
- பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தனது வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக, அரசுக்கு சொந்தமான ஏற்றுமதி – இறக்குமதி வங்கியானது(Exim), இந்தியாவில் 6,000 கோடி ரூபாய் மூலதனத்தை அளித்துள்ளது. Exim1982ல் நிறுவப்பட்டது.
- டி.என்.ஏ தொழில்நுட்ப (பயன்பாடு மற்றும் உபயோகம்) ஒழுங்குமுறை மசோதா – 2019, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- இந்த மசோதா டி.என்.ஏ தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் உபயோகம் : காணாம ல்போனவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள், விசாரணைக் கைதிகள் மற்றும் அடையாளம் தெரியாமல் இறந்து போன நபர்கள் ஆகியோரின் அடையாளம் காணுதல் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக முறைப்படுத்தப்பட்டுள்ளது.
- நாக்பூர் – மும்பை இடையே ஆன ‘சமுருதி காரிடார்’ என்ற விரைவு சாலை திட்டத்திற்காக SBI தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு, நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
- மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சரான சுரேஷ் பிரபு, மும்பையில் ‘10வது இந்திய ரப்பர் எக்ஸ்போ – 2019’-ஐ தொடங்கி வைத்தார்
- நிலவின் மறுபக்கத்திற்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியுள்ளது.
- சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன், சாங் இ – 4 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி உள்ளது. இந்த விண்கலம், நிலவின் குளிர்நிலையை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
- ஜனவரி 15 – இந்திய இராணுவ தினம்
- 1949ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி திரு. கொடண்டரா எம். காரியாப்பா, இந்திய இராணுவத்தின் முதல் தளபதியாக பதவியேற்றார். இந்த தினத்தை நினைவுகூரும் வகையில் இந்திய இராணுவ தினம் 1949 முதல் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தலைநகரில் கொண்டாடப்படுகின்றது.
No comments:
Post a Comment