21st January Current Affairs in Tamil
- இந்திய சினிமா வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் மும்பையில்(மகாராஷ்டிரா), “முதல் இந்திய சினிமா அருங்காட்சியகம்” (National Museum of Indian Cinema, Mumbai) அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த சினிமா அருங்காட்சியகம் இந்திய பிரதமரால் ஜனவரி 16 அன்று தொடங்கப்பட்டது.
- இந்திய பாதுகாப்பு துறைக்கு ஆயுதங்கள் வழங்கும் முதல் தனியார் தொழிற்சாலையான “L & T” நிறுவனமானது, “கே9 வஜ்ரா (K9 Vajra)” ரக பீரங்கிகளை தயாரிப்பதற்கு, சூரத் நகரில்(குஜராத்) உள்ள ஹாஜிரா என்ற இடத்தில் “பீரங்கி உற்பத்தி பிரிவை” தொடங்கியுள்ளது.
- இந்த L & T நிறுவனத்தின் பீரங்கி தொழிற்சாலையை இந்திய பிரதமர் ஜனவரி 19 அன்று திறந்து வைத்தார்.
- ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவச மருத்துவ உதவிகள் வழங்குவதற்கான “பிஜூ ஸ்வத்திய கல்யான் யோஜனா” என்ற திட்டத்தை ஒடிசா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- இத்திட்டமானது, 2018 ஆகஸ்ட் 15 அன்று ஒடிசா மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்திய பெண்கள் குத்துச் சண்டை வீராங்கனைகளுக்கான (Chief Coach for the Indian women boxers) தலைமை பயிற்சியாளராக “முகமது அலி கியாமர்” (Mohammed Ali Qamar) நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை “வினேஷ் போகத்” (Vinesh Phogat), “லாரெஸ் உலக விளையாட்டு” விருதுக்கு (2019 Laureus World Sports Awards) பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
- லாரெஸ் உலக விளையாட்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியர் “வினேஷ் போகத்” ஆவார்.
- இஸ்ரோ-வானது, 2019 ஆம் ஆண்டின் தனது முதல் ராக்கெட்டான “பி.எஸ்.எல்.வி – சி 44” – ஐ ஜனவரி 24 ல் சதீஸ்தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்த உள்ளது.
- இந்த இராக்கெட்டில் “ஹாம் ரேடியோ சேவைக்காக” மாணவர்கள் தயாரித்த “கலாம் சாட்”, செயற்கைக்கோள், “பூமி கண்காணிப்பிற்காக” இஸ்ரோ தயாரித்த “மைக்ரோசாட் – ஆர்” செயற்கைக்கோள் ஆகியவை விண்ணில் செலுத்தபட உள்ளது.
- சீனாவில் தடுப்பு காவலில் உள்ள சீன வழக்கறிஞர், யூ வென்செங் (Yu Wensheng), 2019 ஆம் ஆண்டின் “பிராங்கோ – ஜெர்மன் மனித உரிமைகள்” விருதை (Franco – German Human Rights Award) பெற்றுள்ளார்.
- இந்திய உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக, தினேஷ் மகேஷ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- தற்போது உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment