Tuesday, 22 January 2019

23rd January Current Affairs in Tamil

  • தமிழ்நாட்டில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2019 (Tamil Nadu Global Investor Meet 2019), ஜனவரி 23 அன்று தொடங்குகிறது.
  • தமிழ்நாட்டில் 2015 ஆம் ஆண்டு முதன் முறையாக “உலக முதலீட்டாளர்கள் மாநாடு” நடத்தப்பட்டது.

  • 25-வது “தரைவழி மற்றும் செயற்கைக்கோள் ஒளிபரப்பு மீதான சர்வதேச மாநாடு” மற்றும் “BES கண்காட்சி” ஆகியவை புதுடெல்லியில் நடைபெற்றது.
  • கருத்துரு : தகவல் தொழில்நுட்ப உலகில் அடுத்த தலைமுறை ஒளிபரப்பு என்பதாகும்.
  • நகர்ப்புற சூழலில் “கட்டிடக்கலை பாரம்பரியத்தை பாதுகாக்கும், நகரம்” குறித்த ஆய்வில், பிரேசிலின் “ரியோ டி ஜெனீரோ” நகரை “கட்டிடக் கலையின் உலகத் தலைநகராக” யுனெஸ்கோ அறிவுத்துள்ளது.
  • யுனெஸ்கோ ஆரம்பிக்கப்பட்ட நாள் – 16 நவம்பர் 1945
  • யுனெஸ்கோவின் தலைமையகம் – பாரிஸ் (பிரான்ஸ்).
  • “இந்திய – நேபாள தொழில் முனைவோர்களை” ஊக்குவிப்பதற்கான, “இந்திய – நேபாள தொழில் முனைவோர் மாநாடு 2019” (India, Nepal Entrepreneurship Conclave 2019), நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு நகரில் நடைபெற்றுள்ளது.

  • புனே (மகாராஷ்டிரா) நகரில் நடைபெற்ற, இரண்டாவது “கேலோ – இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில்”(Khelo Inida Youth Games – 2019) மகாராஷ்டிரா மாநிலம் 85 தங்கம் உட்பட மொத்தம் 228 பதக்கங்கள் குவித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
  • தமிழகம் 27 தங்கப்பதக்கத்துடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

  • அமெரிக்காவில் “சீக்கியர்களுக்கு எதிராக இருந்த கொள்கைகளுக்கு” எதிராக பிரச்சாரம் செய்த இந்திய அமெரிக்கரும் சீக்கியருமான “குரிந்தர் சிங் கல்சா” – விற்கு, இன்டியானா நாளிதழ், “ரோசா பார்க்ஸ் முன்னோடி விருதை (Rosa Parks Award – 2019) வழங்கி கௌரவித்துள்ளது.

  • ஸ்வீடன் நாட்டின் புதிய பிரதமராக இடதுசாரி சோஷியலிஸ்ட் ஜனநாயகக் கட்சியின் தலைவர் “ஸ்டீஃபன் லோஃப்வென்” (Stefan Lofven) நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சர்வதேச முகவாண்மை நிறுவனமான பி.டபிள்யூ.சி வெளியிட்டுள்ள, “உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில்” இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா 2-வது இடத்திலும் உள்ளது. ஜப்பான், ஜெர்மனி முறையே 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளது.
  • கடந்த ஆண்டு இந்தியா 7வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Line On Fire: Cease Fire Violation and India – Pakistan Escalation Dynamics – என்ற புத்தகம், ஹேப்பிமேன் ஜேகாப் என்பவரால் எழுதப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இப்புத்தகத்தில், இந்திய இராணுவம், கார்கில் போருக்குப்பின், எல்லை ஊடுறுவலை தடுக்க “ஆப்ரேஷன் கபாத்தி” (Operation Kabaddi) நடத்தியதை பற்றி குறிப்பிடுகிறது.

No comments:

Post a Comment