Friday, 17 May 2019

17th May Current Affairs for TNPSC Exam

  • வாக்காளர்கள் பட்டியல் தயாராகாத காரணத்தாலேயே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது

  • அமேசான் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நெடும் படைப்பு போட்டியில் செந்தில் பாலன் வெற்றி பெற்றுள்ளார்
  • அமேசான் நிறுவனம் உலகளாவிய அளவில் நடத்திய போட்டியில் தமிழ் மொழிக்கான நெடும் படைப்பு போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்
  • “பரங்கிமலை இரயில் நிலையம்” என்ற புதினத்திற்காக தேர்வாகியுள்ளார்.
  • நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது

  • தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வை நடத்துகிறது
  • தமிழ் ஆங்கிலம், ஹிந்தி உள்பட 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது.
  • ஃபானி புயலால் ஒடிஸாவில் ஒத்திவைப்பு
  • வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக தனது திறனை அதிகரிக்க ரஷ்யாவிடம் இருந்து காமோ – 31 (kamov – 31) ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • திட்டத்திற்காக 3600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்தல் மன்றத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  • செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

  • தாய்லாந்தின் 10-வது மன்னராக வஜ்ராலங்கரண் முடி சூட்டிக்கொண்டார்.
  • இவர் சக்ரி வம்சத்தின் 10-வது மன்னராக வஜ்ராலங்கரண் முடி சூடிக்கொள்கிறார்

  • ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றுக்கு ஜோஷ்னா சின்னப்பா தகுதி பெற்றள்ளார்.
  • போட்டி நடைபெறும் இடம் – கோலாலம்பூர்.

  • இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் 15-வது நிதிக்குழுவின் ஆலோசகராக நியமனம்.
  • ஆலோசகர் குழு 12 உறுப்பினர்களை கொண்டது.
  • ஆலோசனை குழு நிதி குழுவிற்கு திட்ட வரைவுகளை கொடுக்கும் அமைப்பாக செயல்படும்.

  • ஜெர்மானிய தத்துவ ஞானி கார்ல் மாக்ஸ் பிறந்த தினம் மே 5.
  • பொதுவுடைமை கொள்கையின் தந்தையாக இவர் கருதப்படுகிறார்.


No comments:

Post a Comment