Tuesday 3 November 2020

BITA

(Banking Institute & TNPSC Academy)

Current Affairs 3-10-2020

 

தமிழ்நாடு

 தமிழக மீனவர்களுக்கான கிசான் கிரெடிட் கார்டு கடன் திட்டத்தை (Kisan credit card loan scheme for fishermen in TamilNadu)  இந்தியன் வங்கி ( Indian Bank  ) 1-10-2020 அன்று அறிமுகப்படுத்தியுள்ளதுஇந்த திட்டத்தின் கீழ், 7% வட்டி விகிதத்துடன் பணி மூலதனமாக ரூ .2 லட்சம் வரை கடன்களைப் பெற முடியும். இந்த கடன் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும். கடன் வாங்குபவர்களுக்கு ரூபாய் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும்.

இந்தியா

 4வது உலக பெண்கள் மாநாடு - பீஜிங் +25 ( Fourth World Conference on Women (FWCW) – Beijing +25 ) ல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி இராணி 1-10-2020 அன்று இணையவழியில் கலந்து கொண்டு உரையாற்றினார்

 ஆயுஷ் கிரிட் திட்டம் (AYUSH Grid Project) :  ஆயுஷ் துறையில் உள்ள இடைவெளிகளை நிரப்பவும், பல்வேறு முக்கிய சுகாதார தொழில்நுட்பத் திட்டங்களை செயல்படுத்தவும், ஒட்டுமொத்த துறைக்கும் விரிவான தகவல் தொழில்நுட்ப முதுகெலும்பை உருவாக்குவதற்காக 2018-இல் ஆயுஷ் கிரிட் திட்டம் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. ஒட்டுமொத்த ஆயுஷ் துறையின் டிஜிட்டல் மயமாக்கல் அனைத்து மட்டங்களிலும் சுகாதார சேவகளை வழங்குதல், ஆராய்ச்சி, கல்வி, சுகாதார திட்டங்கள் மற்றும் மருந்து கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் மாபெரும் மாற்றங்களை உருவாக்கும்.  

 மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் நடைபெறும்வைபவ்’ (Vaishwik Bhartiya Vaigyanik (VAIBHAV) Summit 2020) என்னும் கல்வி மேம்பாடு தொடா்பான உச்சி மாநாடு, 2-10-2020 அன்று தொடங்கி 30-10-2020 வரையில் நடைபெறுகிறது.  உலகின் பல்வேறு பகுதியிலுள்ள கல்வியாளா்களும் ஆராய்ச்சியாளா்களும் காணொலி வாயிலாக கலந்து கொள்ளும் இந்நிகழ்வில், பிரதமா் நரேந்திர மோடியும் காணொலி வாயிலாக கலந்து கொண்டு 2-10-2020 அன்று இதனைத் தொடக்கி வைத்தார்.

 ‘இண்டியா ஒன்போயிங் 777-300இஆா் விமானம் :  குடியரசுத் தலைவா், பிரதமா் போன்றவா்கள் பயணிக்க நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும்இண்டியா ஒன்போயிங் 777-300இஆா் விமானம்  விவிஐபிகளை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு குழு(எஸ்பிஜி)வின் முழு ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்டுள்ளன

வெளிநாட்டு உறவுகள்

 “ஃபோங்கோசாகர்” (Bongosagar) என்ற பெயரில், இந்தியா - வங்காளதேச நாடுகளின் கடற்படைகளின் கூட்டு இராணுவ ஒத்திகை 3-10-2020 முதல் மூன்று நாட்களுக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நடைபெறுகிறது

 மகாத்மா காந்தியின் 151-ஆவது பிறந்தநாளையொட்டி 41 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 6 பள்ளிப் பேருந்துகள் ஆகியவற்றை நேபாள நாட்டுக்கு இந்தியா நன்கொடையாக அளித்துள்ளது.

உலகம்

 அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் 6.5 சதவீத்தினா் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

 பிரிட்டனில்  71 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சூப்பா் மாா்கெட் நிறுவனமான ஆஸ்டாவை   இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கோடீஸ்வர சகோதரா்களான குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட  மோஷின் மற்றும் ஷுபோ் இஸா ஆகியோர் கையகப்படுத்தவுள்ளனா்.

முக்கிய தினங்கள்

 முதலாவது, உலக அஞ்சல் அட்டை தினம் (World Postcard Day)   - அக்டோபர்

அறிவியல் தொழில்நுட்பம்

 இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO)  தனது  வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கானசுக்ரயான் -1” (“Shukrayaan-1”) திட்டத்தை பிரான்ஸ் நாட்டின் விண்வெளி ஆய்வுகளுக்கான தேசிய மையத்துடன் (CNES- National Centre for Space Studies; French) இணைந்து  2025 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தவுள்ளது.

 இந்த திட்டத்தில் பயன்படுத்த, பிரான்ஸ் நாட்டின் விண்வெளி ஆய்வுகளுக்கான தேசிய மையம் மற்றும் ரஷியாவின் ரோஸ்கோஸ்மோஸ் மற்றும்  லாட்மோஸ் (LATMOS (Atmospheres, Milieux, Observations Spatiales Laborator) ) இணைந்து உருவாக்கியுள்ள “VIRAL” (Venus Infrared Atmospheric Gases Linker / வெள்ளி அகச்சிவப்பு வளிமண்டல வாயு இணைப்பான்) எனும் கருவியை இந்திய விண்வெளி ஆய்வு மையம் தேர்வு செய்துள்ளது

 சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருள்களை ஏற்றிக் கொண்டுகல்பனா சாவ்லாவிண்கலத்தை விண்ணில் செலுத்தும் திட்டத்தை அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

விருதுகள்

 மகாத்மா காந்தி தேசிய அறக்கட்டளையின் (Mahatma Gandhi National Foundation(MGNF) )  ”காந்தி விருது 2020” (Gandhi Award 2020) , ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்  சஞ்சய் சிங்கிற்கு (Sanjay Singh) அறிவிக்கப்பட்டுள்ளது

1 comment:

  1. Great Information sharing.I am very happy to read this article .. thanks for giving us go through info.Fantastic nice. I appreciate this post.Take a look at Is Black Friday Canceled in 2020? – Get Sells and Deal Predictions

    ReplyDelete