Saturday 28 November 2020

CURRENT AFFAIRS 27 NOVEMBER 2020

BITA (Banking Institute & TNPSC Academy)

நடப்பு  நிகழ்வுகள்

                        

1).'டெல்லி க்ரைம்' என்ற வலைத்தொடர் சிறந்த நாடகத் தொடர் என்ற விருதை வென்றது. இந்த விருதானது சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியால் வழங்கப்பெற்றது.

 2).கர்நாடக மாநில அரசால் ஹவேரி இரயில் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் மஹாதேவ மைலர் பெயர் சூட்டபட்டது.

 3).கேரளா போலீஸ் சட்டம் 2011- கேரள அரசு திருத்த முடிவுசெய்துள்ளது. புதிய பிரிவு 118A ஆன்லைன் தளங்களில் தவறான உள்ளடக்கத்தை உருவாக்கியதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10000 வரை அபதாரம் என்ற புதிய விதி சேர்க்க முடிவு செய்துள்ளது.

 4).UMANG என்பது புதிய வயது நிர்வாகத்திற்கான ஒருங்கிணைந்த மொபைல் பயன்பாடு. இதன் சர்வதேச பதிப்பை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டார்.

 5) ஆபரேஷன் கலிப்ஸோ: வருவாய் புலனாய்வு இயக்குனரகம் இந்த நடவடிக்கையை தொடங்கியது. இதன் மூலம் மும்பையில் நாடுகடந்த போதைப்பொருள் மோசடி மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆபரேஷன், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரிய அதிகாரிகளால் நடத்தப்பட்டது.

 6) தீ பயன்பாடு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். இது தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளை அணுக பொதுமக்களின் நலனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 7) மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியலுக்கு வட்டயன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.

 8) பிரிட்டிஷ் எழுத்தாளர் டக்ளஸ் ஸ்டூவர்ட் தனது முதல் நாவலான ஷக்கி பெயினுக்கு இங்கிலாந்து புக்கர் பரிசு வென்றார்.

 9) 2020-ம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றவர் மரீகே லூகாஸ் ரைன்வெல்ட் ஆவார்.

 10)நிவார் சூறாவளி: புதுச்சேரி அருகே நள்ளிரவு நிலச்சரிவை ஏற்ப்படுத்தியது. நிவாருக்கு ஈரான் பெயர் கொடுத்தது.

No comments:

Post a Comment