உலகம்:
ஹெச்1பி விசாக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் மசோதா தாக்கல்
இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பணி நிமித்தமாக அமெரிக்காசெல்வதற்கு வழிவகை செய்யும் "ஹெச்1பி' விசா முறையில் கடுமையானகட்டுப்பாடுகளை விதிப்பதற்கான சீர்திருத்த வரைவு மசோதா அந்த நாட்டுநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த இந்தியர்களையும், இந்தியநிறுவனங்களையும் மிகக் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறுதொழில்நிறுவனங்கள், அந்தந்த துறைகளில் தேர்ந்த வெளிநாட்டினரை தங்கள்நிறுவனங்களில் குறிப்பிட்ட காலங்களுக்கு பணியமர்த்திக் கொள்ள முடியும். அந்த வகையில், ஆண்டுக்கு லட்சக்கணக்கான வெளிநாட்டினரை அமெரிக்கநிறுவனங்கள் பணியமர்த்தி வருகின்றன.
இவ்வாறு பணியமர்த்தப்படும் வெளிநாட்டினர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன்கூடிய "ஹெச்1பி' விசாக்களை அமெரிக்க அரசு வழங்கி வருகிறது. இந்த"ஹெச்1பி' விசாக்களுடன் அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில்இந்தியர்கள் கணிசமான அளவு உள்ளனர்.
ஈரான் புதிய ஏவுகணை சோதனை: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரஆலோசனை
அணுஆயுதத்தை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட புதியஏவுகணையை ஈரான் நாடு சோதித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்புகவுன்சில் குழு அவசரமாக செவ்வாய்க்கிழமை கூடி ஆலோசனை நடத்தியது.
ஈரான் நாடு அணுகுண்டு தயாரிப்பில் ரகசியமாக ஈடுபட்டிருப்பதாக எழுந்தசந்தேகத்தின்பேரில், அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளைமேலை நாடுகள் விதித்தன. இந்நிலையில், ஈரானுக்கும், மேலை நாடுகளுக்கும்இடையே அணுசக்தி விவகாரம் தொடர்பாக கடந்த 2015-ஆம் ஆண்டு முக்கியஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து, ஈரான் அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும்"பேலிஸ்டிக்' ரக ஏவுகணைகளை சோதித்து பார்ப்பதற்கு ஐ.நா. பாதுகாப்புக்கவுன்சில் குழு தடை விதித்தது. அதை ஈரான் ஏற்றுக் கொண்டதால், சிலதடைகளை மேலை நாடுகள் நீக்கின.
இந்நிலையில், ஈரான் நாடு புதிய பேலிஸ்டிக் ரக ஏவுகணையை தற்போதுசோதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஏவுகணை சுமார் 600 மைல் தூரம் பறந்து சென்று வெடித்துச் சிதறிவிட்டதாக அந்த செய்திகள்தெரிவிக்கின்றன. இந்தத் தகவலை வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசியஅமெரிக்க பாதுகாப்புத் துறை ஒருவரும் உறுதிப்படுத்தினார்.
இந்தியா:
மே 7-இல் "நீட்' நுழைவுத் தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்)வரும் மே மாதம் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 80 நகரங்களில்இந்தத் தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
பொது மருத்துவம் (எம்பிபிஎஸ்) மற்றும் பல் மருத்துவ (பிடிஎஸ்) படிப்புகளுக்கான இடங்களை "நீட்' தேர்வு மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும்என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அதற்கான அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அத்தகைய நுழைவுத் தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து, மாணவர் சேர்க்கையில் பழைய நடைமுறையையே பின்பற்ற தமிழகத்துக்குஅனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
இதனிடையே, நுழைவுத் தேர்வுகளின்றி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கை நடத்த வகை செய்யும் சட்ட முன்வடிவை தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.
இந்தச் சூழலில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கானதேதியை சிபிஎஸ்இ செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதன்படி, இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், வெளிநாட்டவர் எனஅனைவரும் இந்தத் தேர்வை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மத்திய பட்ஜெட்: ரயில்வே பட்ஜெட்டில் பாதுகாப்புக்குமுக்கியத்துவம்?
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை பொது பட்ஜெட்டுடன்இணைந்து முதல் முறையாக தாக்கல் செய்ய உள்ள ரயில்வே பட்ஜெட்டில்தில்லி-ஹெளரா மற்றும் தில்லி-மும்பை மார்க்கங்களில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது மற்றும் ரயில்களின் பாதுகாப்புஉள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
நாட்டில் சுமார் 92 ஆண்டு காலமாக மத்திய பொது பட்ஜெட் தனியாகவும், ரயில்வே பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்படுவதே வழக்கமாக இருந்துவந்துள்ளது. இந்நிலையில், அரசின் சீர்திருத்த செயல்திட்டத்தின்படி இம்முறைஇரண்டு பட்ஜெட்களும் நாடாளுமன்றத்தில் இணைத்து தாக்கல் செய்யப்படஉள்ளன.
அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ள புதிய பட்ஜெட்டில் ரயில்வே நிர்வாகத்தின்நிதிநிலைமை, திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சில பத்திகள்கூடுதலாக இடம்பெறும் என்று தெரிகிறது.
ரயில்வே பட்ஜெட்டில் தில்லி-ஹெளரா மற்றும் தில்லி-மும்பை மார்க்கங்களில்மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது, ரூ.20,000 கோடி மதிப்பில்ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம்அளிக்கப்படும் என்று தெரிகிறது.
சுமார் 1050 கிராமங்களில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை கட்டமைக்கமத்திய அரசு முடிவு
டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க மத்திய அரசு இலவச வைபைஹாட்ஸ்பாட் வழங்க திட்டமிட்டுள்ளது.
அதன் படி சுமார் 1050 கிராமங்களில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களைகட்டமைக்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்குள்துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென இண்டர்நெட் வழங்கசிறப்பு டவர்கள் கட்டமைக்கப்படுகின்றன.
இதனை பயன்படுத்தி கிராம வாசிகள் தங்களது மொபைல் போன்களில்இண்டர்நெட் வசதியை பெற முடியும். மத்திய அரசின் டிஜிட்டல் வில்லேஜ்திட்டம் சுமார் 62 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் துவங்கப்படஇருப்பதாக கூறப்படுகின்றது.
ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்ந்து மத்திய அரசும்இலவச வைபை வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு :
டிஎன்ஜிஏ தலைவரானார் டிஜிபி ராதாகிருஷ்ணன்
தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத் (டிஎன்ஜிஏ) தலைவராக, தமிழக காவல்துறைடிஜிபி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்காக சென்னையில் நடைபெற்ற தேர்தலில், மொத்தம் உள்ள 32 மாவட்டசங்கங்களில், 26 சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தத் தேர்தலுக்கானகண்காணிப்பாளராக சென்னை உயர் நீதிமன்ற முன்னால் நீதிபதி செயல்பட்டார்.
வர்த்தகம் :
முக்கிய 8 துறைகள் உற்பத்தி 5.6% வளர்ச்சி
நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி கடந்த ஆண்டு டிசம்பரில் 5.6 சதவீதமாக அதிகரித்தது.
இது, முந்தைய நவம்பர் மாதத்தில் 4.9 சதவீதமாகவும், 2015-ஆம் ஆண்டுடிசம்பரில் 2.9 சதவீதமாகவும் காணப்பட்டது என மத்திய வர்த்தக மற்றும்தொழில்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில்தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஒட்டுமொத்த தொழிலக உற்பத்தியில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கைஎரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உருக்கு, உரம், சிமெண்ட் மற்றும் மின்சாரம்ஆகிய எட்டு துறைகளின் பங்களிப்பு மட்டும் 38 சதவீத அளவுக்கு உள்ளது.
சென்ற டிசம்பரில் சுத்திகரிப்பு துறை மற்றும் உருக்கு துறையின் உற்பத்திமுறையே 6.4 சதவீதம் மற்றும் 14.9 சதவீதம் என்ற அளவில் அதிகரித்தது. இருப்பினும், கச்சா எண்ணெய், உரம், இயற்கை எரிவாயு மற்றும் சிமெண்ட்ஆகிய துறைகளின் உற்பத்தி பின்னடைவைக் கண்டன. நிலக்கரி துறையின்உற்பத்தி 5.3 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாகவும்,மின் துறையின் உற்பத்தி 8.8 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும் சரிந்தது
No comments:
Post a Comment