உலகம்:
"பிரெக்ஸிட்' நடவடிக்கைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு அந்த
நாட்டு
நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, "பிரெக்ஸிட்' எனப்படும் ஐரோப்பிய யூனியன் விலகல்
நடவடிக்கையின் அடுத்த
கட்டத்தை பிரிட்டன் அடைந்துள்ளது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு முன்னர், அந்த
அமைப்பின் பிற
உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி
தனித்தனியான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ள
வேண்டும். அதற்காக, இதுதொடர்பான லிஸ்பன் ஒப்பந்தத்தின் 50-ஆவது
பிரிவை
அந்த
நாடு
அமல்படுத்த வேண்டும். அதற்கு
அனுமதி
கோரும்
தீர்மானம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை கொண்டு
வரப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக
498 எம்.பி.க்களும், எதிராக
114 எம்.பி.க்களும் வாக்களித்தனர். இதையடுத்து, உறுப்பினர்களின் ஆதரவுடன் அந்தத்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக ரெக்ஸ் டில்லர்ஸன் பதவியேற்பு
அமெரிக்காவின் புதிய
வெளியுறவுத் துறை
அமைச்சராக தொழிலதிபர் ரெக்ஸ்
டில்லர்ஸன் (64) புதன்கிழமை பதவியேற்றார்.
ரஷிய அதிபர்
விளாதிமீர் புதினுக்கு மிக
நெருக்கமானவர் என்ற
சர்ச்சைக்கிடையிலும் ரெக்ஸ்
டில்லர்ஸன்க்கு முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத் துறை
அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
பன்னாட்டு எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபிலின் தலைமை
செயலதிகாரியாகப் பொறுப்பு வகித்துள்ள ரெக்ஸ்
டில்லர்ஸன், இதுவரை
எந்த
அரசுப்
பதவியும் வகித்ததில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
அவருக்கு வெளியுறவுத் துறை
அமைச்சர் பதவியை
அதிபர்
டிரம்ப் வழங்குவது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் புதன்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில், ரெக்ஸ்
டில்லர்ஸனின் நியமனத்துக்கு ஆதரவாக
56 எம்.பி.க்களும், எதிராக
43 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
இதையடுத்து, அதிபர்
மாளிகையின் ஓவல்
அலுவலகத்தில் புதன்கிழமை இரவு
நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், வெளியுறவுத் துறை
அமைச்சராக ரெக்ஸ்
டில்லர்ஸன் பதவிப்
பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
10 அணுகுண்டுகளை ஏந்திச் செல்லும் ஏவுகணை: சீனா ரகசிய சோதனை
ஒரே நேரத்தில் 10 அணுகுண்டுகளை ஏந்திச் சென்று
வீசக்கூடிய ஏவுகணையின் புதிய
ரகத்தை
சீனா
ரகசியமாக சோதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:
தனது டிஎஃப்-5
ஏவுகணையின் புதிய
ரகத்தை
சீனா
கடந்த
மாதம்
வெற்றிகரமாக சோதித்துள்ளது.
இந்தப் புதிய
ரக
ஏவுகணை,
ஒரே
நேரத்தில் 10 அணுகுண்டுகளை ஏந்திச் செல்லும் திறன்
கொண்டது. இதில்
பொருத்தப்படும் ஒவ்வோர் அணுகுண்டும் தனித்
தனியாக
வெவ்வேறு இலக்குகளைக் குறி
வைத்துத் தாக்கக் கூடியவை ஆகும்.
ஷான்க்ஸி மாகாணம், தாயுவான் ஏவுகணைத் தளத்திலிருந்து இந்த
புதிய
ஏவுகணை
சோதிக்கப்பட்டது.
இந்த ஏவுகணை
சோதனையை அமெரிக்க உளவு
நிறுவனங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வந்தன.
சீனாவில் நடைபெறும் ராணுவ
ரீதியிலான சோதனைகளை அமெரிக்க உளவுத்
துறை
தொடர்ந்து கண்காணித்து வருவதாக ராணுவ
தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் கேரி
ரோஸ்
தெரிவித்தார்.
தென் சீனக்
கடலில்
தனது
ஆதிக்கத்தை நிலைநாட்டவும், அமெரிக்க நிலைகளுக்கு எதிரான
தனது
ராணுவ
வலிமையை அதிகரிக்கவும் சீனா
முயற்சி செய்து
வரும்
நிலையில், இந்த
சோதனை
நிகழ்த்தப்பட்டுள்ளது.
மறுபரிசீலனையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்கா
அணு ஆயுதம்
சுமந்து செல்லும் திறன்
கொண்ட
ஏவுகணைப் பரிசோதனையில் ஈரான்
ஈடுபட்டதைத் தொடர்ந்து, அந்த
நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து
வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் அணு
ஆயுதம்
தயாரிப்பதற்கானவை அல்ல
என்பதை
அந்த
நாடு
உறுதிப்படுத்தவும், அதற்குப் பதிலாக
ஈரான்
மீது
விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை
வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்ளவும் இது
தரப்பினருக்கும் இடையே
கடந்த
2015-ஆம்
ஆண்டு
அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், அணு
ஆயுதம்
சுமந்து செல்லக்கூடிய "பாலிஸ்டிக்' வகை
ஏவுகணையை ஈரான்
அண்மையில் பரிசோதித்ததாகவும், அது
அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிரானது எனவும்
அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஏவுகணைப் பரிசோதனையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட ஈரான்,
அந்தப்
பரிசோதனை வல்லரசு நாடுகளுடன் செய்துகொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்துக்கு விரோதமானது அல்ல
என்று
தெரிவித்தது.
தமிழகம்:
டி.என்.பி.எஸ்.சி.யின் ஆண்டு திட்ட அறிக்கை வெளியீடு
நிகழ் ஆண்டுக்கான ஆண்டுத் திட்ட
அறிக்கையை, தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இதில்,
குரூப்
4 தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியாகிறது.
இந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வருவாய்த் துறையில் காலியாக உள்ள
கிராம
494 நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான தேர்வு
அறிவிக்கை ஜூன்
1 முதல்
வாரத்தில் வெளியிடப்பட்டு, செப்டம்பர் 17-இல்
எழுத்துத் தேர்வு
நடத்தப்படும்.
கல்லூரிகளில் காலியாக உள்ள
21 நூலகர்
பணியிடங்களுக்கான தேர்வு
அறிவிக்கை ஜூலை
முதல்
வாரத்தில் வெளியிடப்பட்டு, செப்டம்பர் 24-இல்
தேர்வு
நடத்தப்படும். வனத்
துறையில் காலியாக உள்ள
14 உதவி
வனப்
பாதுகாவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு
அறிவிக்கை ஆகஸ்ட்
முதல்
வாரத்தில் வெளியிடப்பட்டு, 2018 ஜனவரியில் தேர்வு
நடத்தப்படும்.
தோட்ட கலைத்
துறையில் காலியாக உள்ள
100 உதவி
இயக்குநர்களை நிரப்புவதற்கான தேர்வு
அறிவிக்கை ஆகஸ்ட்
2-வது
வாரத்தில் வெளியிடப்பட்டது, எழுத்துத் தேர்வு
நவம்பர் 26-இல்
நடத்தப்படும். 1,788 காலியிடங்களை நிரப்ப
நடத்தப்படும் குரூப்
4 தேர்வுக்கான அறிவிக்கை செப்டம்பர் 2-வது
வாரத்தில் வெளியிடப்பட்டு, 2018 ஜனவரி 7-இல்
நடத்தப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு :
ஸ்பின்னர் யுவேந்திர சாஹல்: சர்வதேச செஸ் வீரர்!
இங்கிலாந்துக்கு எதிரான
3-ஆவது
மற்றும் கடைசி
ஒரு
நாள்
கிரிக்கெட் ஆட்டத்தில் 75 ரன்கள்
வித்தியாசத்தில் வெற்றி
கண்டது
இந்தியா. இந்த
வெற்றியின் மூலம்
3 போட்டிகள் கொண்ட
இந்தத்
தொடரை
2-1 என்ற
கணக்கில் கைப்பற்றியது இந்தியா.
இங்கிலாந்து அணி
ஒரு
கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள்
எடுத்திருந்த நிலையில், அடுத்த
8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. சாஹல்
6 விக்கெட்டுகளும், பூம்ரா
3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
14-ஆவது ஓவரை வீசிய
சாஹல்,
அடுத்தடுத்த பந்துகளில் மோர்கன், ஜோ
ரூட்
ஆகியோரை வீழ்த்த ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. இறுதியில் இங்கிலாந்து அணி
16.3 ஓவர்களில் 127 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியத் தரப்பில் யுவேந்திர சாஹல்
4 ஓவர்களில் 25 ரன்களை
கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் மற்றும் தொடர்
நாயகன்
விருதுகளையும் அவர்
தட்டிச் சென்றார்.
சாஹல் 6வி/25; இந்தியா அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான
3-ஆவது
மற்றும் கடைசி
ஒரு
நாள்
கிரிக்கெட் ஆட்டத்தில் 75 ரன்கள்
வித்தியாசத்தில் வெற்றி
கண்டது
இந்தியா.
இந்த வெற்றியின் மூலம்
3 போட்டிகள் கொண்ட
இந்தத்
தொடரை
2-1 என்ற
கணக்கில் கைப்பற்றியது இந்தியா.
இந்த ஆட்டத்தில் ரெய்னா
63 ரன்களும், தோனி
56 ரன்களும் குவித்தனர். யுவேந்திர சாஹல்,
பூம்ரா
ஆகியோரின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து திக்குமுக்காடியது. அந்த
அணி
ஒரு
கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள்
எடுத்திருந்த நிலையில், அடுத்த
8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. சாஹல்
6 விக்கெட்டுகளும், பூம்ரா
3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த
ஆட்டத்தில் இந்திய
அணியில் மணீஷ்
பாண்டேவுக்குப் பதிலாக
அறிமுக
வீரரான
ரிஷப்
பந்த்
சேர்க்கப்பட்டார். டாஸ்
வென்ற
இங்கிலாந்து கேப்டன் இயான்
மோர்கன் பீல்டிங்கை தேர்வு
செய்ய,
கேப்டன் விராட்
கோலியும், கே.எல்.ராகுலும் இந்தியாவின் இன்னிங்ûஸ தொடங்கினர். 4 பந்துகளைச் சந்தித்த கோலி 2 ரன்கள் மட்டுமே எடுத்த
நிலையில் அவசரப்பட்டு ரன்
அவுட்டானார்.
டி20 தரவரிசை: கோலி தொடர்ந்து முதலிடம்
ஐசிசி டி20
கிரிக்கெட் தரவரிசையில் இந்திய
அணியின் கேப்டன் விராட்
கோலி
தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
2-ஆவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் ஆரோன்
ஃபிஞ்சைவிட 28 ரேங்கிங் புள்ளிகளை கூடுதலாக பெற்றுள்ளார் கோலி.
ஆஸ்திரேலியாவின் மற்றொரு அதிரடி
பேட்ஸ்மேனான கிளன்
மேக்ஸ்வெல் 3-ஆவது
இடத்தில் உள்ளார்.
கோலி, டெஸ்ட்
தரவரிசையில் 2-ஆவது
இடத்திலும், ஒரு
நாள்
போட்டி
தரவரிசையில 3-ஆவது
இடத்திலும், டி20
தரவரிசையில் முதலிடத்திலும் உள்ளார்.
இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ
ரூட்
இரு
இடங்கள் முன்னேறி 5-ஆவது
இடத்தையும், இந்திய
வீரர்
கே.எல்.ராகுல் 15 இடங்கள் முன்னேறி 15-ஆவது
இடத்தையும் பிடித்துள்ளனர்.
பெளலர்கள் தரவரிசையில் தென்
ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர்
முதலிடத்திலும், இந்தியாவின் ஜஸ்பிரித் பூம்ரா
2-ஆவது
இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் சாமுவேல் பத்ரீ
3-ஆவது
இடத்திலும் உள்ளனர்.
வர்த்தகம் :
பொதுக் காப்பீட்டு நிறுவன பங்கு விற்பனை: ரூ.11,000 கோடி திரட்ட திட்டம்
பொதுக் காப்பீட்டு நிறுவன
பங்கு
விற்பனை மூலம்
ரூ.11,000
கோடி
திரட்ட
மத்திய
அரசு
திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பங்கு
விலக்கல் துறை
செயலர்
நீரஜ்
குப்தா
தெரிவித்ததாவது: வரும்
2017-18-ஆம்
நிதி
ஆண்டுக்கான பட்ஜெட்டில் பங்கு
விற்பனை மூலம்
ரூ.72,500
கோடி
திரட்ட
இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு
நிதி
ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவான
ரூ.45,500
கோடியை
காட்டிலும் இது
அதிகமான தொகையாகும்.
மொத்த இலக்கில், சிறுபான்மை பங்கு
விற்பனை மூலம்
ரூ.46,500
கோடியும், பொதுத்
துறை
நிறுவனங்களில் மத்திய
அரசு
கொண்டுள்ள பங்கு
விற்பனை மூலம்
ரூ.15,000
கோடியும் திரட்டப்பட உள்ளது.
இதற்கு ஏதுவாக,
பொது
காப்பீட்டு நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியலிட்டு அதன்
மூலம்
ரூ.11,000
கோடி
திரட்ட
திட்டமிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட பங்கு
விற்பனை இலக்கை
எட்ட
தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
No comments:
Post a Comment