Friday, 14 September 2018

15th செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்

தென்கொரியாவின் முதல் நீர்மூழ்கி போர்க்கப்பல்

தென்கொரியாவின் முதல் நீர் மூழ்கி போர்க்கப்பல் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது.
2-ம் உலகப்போரின் போது கொரியா உடைந்து ரஷ்ய ஆதர வுடன் வடகொரியா, அமெரிக்க ஆதரவுடன் தென்கொரியா நாடு கள் உதயமாகின. கடந்த 1950 முதல் 1953 வரை வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே போர் நடைபெற்றது. அதன்பிறகும் கொரிய தீபகற்பத்தில் போர் மேகம் சூழ்ந்திருந்தது.

3-ம் முறை கட்சித் தலைவராகிறார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே: அரசியல் சட்டத்தை திருத்த திட்டம்
ஜப்பானின் ஆளும் கட்சித் தலைவராக 3-வது முறையாக தேர்வு செய்யப்பட உள்ள பிரதமர் ஷின்சோ அபே (63), அந்நாட்டு அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் செய்ய திட்ட மிட்டுள்ளார்.
முற்போக்கு ஜனநாயக கட்சி யின் (எல்டிபி) தலைவரான ஷின்சோ அபே, கடந்த 2012-ம் ஆண்டு முதல் பிரதமராக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலை யில், எல்டிபி கட்சித் தலைவர் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதில் அபேவுக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிங்கெரு இஷிபா போட்டியிடுகிறார்.

சவுதி அரேபியாவில் முதல் முறை; விமானத் துறையில் பெண்கள்
சவுதியிலேயே முதல் முறையாக பெண்களை இணை விமானிகளாகவும், விமான ஊழியர்களாகவும் பணியில் அமர்த்த உள்ளது ரியாத்தைச் சேர்ந்த விமான நிறுவனம்.
ஃப்ளைனஸ் என்னும் விமான நிறுவனம் இந்தப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: கால் இறுதியில் ஸ்ரீகாந்த் தோல்வி

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற ஸ்வப்னாவுக்கு பிரத்யேக ஷூ: மத்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்பாடு

வாகன இறக்குமதி விதிமுறைகள்: தடைகளை விலக்கியது மத்திய அரசு

No comments:

Post a Comment