Wednesday, 26 September 2018

26th செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்

இந்தியாவில் இருந்து 400 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்டு கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு
இந்தியாவில் இருந்து 400 ஆண்டுகளுக்கு முன்பு புறப்பட்டுச் சென்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கிய நிலையில் அதன் பாகங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான போர்ச்சுகலின் லிஸ்பன் நகரின் கடல் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் சமீபகாலமாக ஆய்வு செய்து வந்தனர். அந்த பகுதியில் மூழ்கிய கப்பல் ஒன்றின் பாகங்கள் கண்டறியப்பட்டன. ஆய்வில் அவை 400 ஆண்டுகளுக்கு முந்தையவை என தெரிய வந்துள்ளது.

இந்தியா - பாக் இடையே 3700 கோடி டாலர் வர்த்தக வாய்ப்பு; 1209 பொருட்கள் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் தடை: உலக வங்கி அறிக்கை
இந்தியா பாகிஸ்தான் இடையே 3700 கோடி டாலர் அளவுக்கு வர்த்தக வாய்ப்புள்ளன என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. எனினும் தொடர்ச்சியான அரசியல் பதட்டம் காரணமாக இரு தரப்புக்குமான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

பாரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் ஆதித்யா கிரி
28-வது அகில இந்திய ஜிவி மவ்லாங்கர் பாரா துப்பாக்கி சுடு தல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை ஆவடியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஆதித்யா கிரி, ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் புரோன் பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டான்டிங் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
இந்த ஆண்டில் மதுரையில் நடைபெற்ற மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரி லும் ஆதித்யா கிரி, 2 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்திருந்தார். இதனால் அவர் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கும் தேர்வாகி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment