Saturday, 13 October 2018

13th அக்டோபர் முக்கிய நிகழ்வுகள்

அதிக வாக்குகள் பெற்ற இந்தியா: ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்கு தேர்வு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலில் மொத்தம் 193 வாக்குகளில் 188 வாக்குகள் பெற்று இந்தியா இந்த வெற்றியை பெற்றுள்ளது.

193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் உறுப்பினர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுகின்றனர். 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு புதிய கவுன்சில் செயல்படும்.

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் 5 தங்கம்
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் பாரா ஆசிய விளையாட்டு நடைபெற்று வரு கிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான செஸ் போட்டியில் இந்தியாவின் கே.ஜெனிதா ஆன்டோ இறுதி சுற்றில் 1-0 என்ற கணக்கில் இந்தோனேஷியாவின் ராஸ்லின்டாவை வீழ்த்தி தங் கப் பதக்கம் வென்றார். இதே போல் ஆடவர் பிரிவில் இந்தியா வின் கிஷான் கங்கோலி தங்கம் வென்று அசத்தினார். பாட்மிண்ட னில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பாருல் பார் மர் இறுதி போட்டியில் 21-9, 21-5 என்ற நேர் செட்டில் தாய்லாந் தின் வான்டே கம்டமை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் யாதவ் 29.24 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கமும், அமித் பால்யன் 28.79 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இதேபோல் ஆடவருக்கான கிளப் த்ரோ போட்டியில் இந்தியாவின் அமித் குமார், தரம்பிர் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றினர்.


No comments:

Post a Comment