மலேசியாவிலும்
ஆதார்:
இந்தியாவை
பின்பற்ற முடிவு
அரசின்
அனைத்து திட்டங்களுக்கும்,
சலுகைகளுக்கும்
ஆதார் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டதை
எதிர்த்து இந்தியா முழுவதும்
பல மாநிலங்களில் வழக்கு
தொடரப்பட்டன.
தவிர
பான் எண்,
வங்கிக்
கணக்கு,
மொபைல்
எண் போன்றவற்றுக்கும் இணைக்க
வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது.
இவற்றை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள்
அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு
மாற்றப்பட்டு,
உச்ச
நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்த
வழக்கில் இறுதி தீர்ப்பை
வழங்கிய உச்ச நீதிமன்றம்,
அரசியல்
சட்டப்படி ஆதார் சரியானது
தான் என்று தீர்ப்பளித்தது.
அதேசமயம்
அதன் பயன்பாடுகளுக்கு
கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
எனினும்
ஆதார் தொடர்பாக பல்வேறு
மாறுபட்ட கருத்துக்கள்
மக்களிடம் நிலவி வருகின்றன.
ஆனால்
ஆதார் பயன்பாட்டால் போலியான
நபர்கள் ஒழிக்கப்பட்டு
மானியங்கள் சரியான முறையில்
பயன்படுத்தப்படுவதாக மத்திய
அரசு வாதிட்டு வருகிறது.
இந்தநிலையில்
மலேசிய அரசும் தங்கள் நாட்டில்
ஆதாரை பயன்படுத்த ஆலோசித்து
வருகிறது.
அந்நாட்டில்
ஏற்கெனவே தேசிய அடையாள அட்டை
குடிமக்களுக்கு உள்ளது.
மைகாட்
என்ற பெயரிலான இந்த அட்டையில்
ஆதார் போன்று கைரேகை மற்றும்
விழித்திரை எடுக்கப்பட்டு
தகவல்கள் சேகரிக்க மலேசிய
அரசு முடிவு செய்துள்ளது.
புரோ
கபடி லீக் போட்டி:
பாட்னா
பைரேட்ஸ் அபாரம்
6-வது
சீசன் புரோ கபடி லீக் போட்டியில்
பாட்னா பைரேட்ஸ் அணியினர்
அபாரமாக விளையாடி யு.பி.
யோதா
அணியை வீழ்த்தினர்.
புரோ
கபடி லீக் போட்டியின் 2-வது
கட்ட ஆட்டங்கள் ஹரியாணா
மாநிலம் சோனிபட் நகரில்
நடைபெற்று வருகின்றன.
நேற்று
நடைபெற்ற லீக் ஆட்டத்தில்
பாட்னா பைரேட்ஸ் அணி 43-37
என்ற
புள்ளிகள் கணக்கில் யு.பி.
யோதா
அணியைச் சாய்த்தது.
பாட்னா
பைரேட்ஸ் அணியின் நட்சத்திர
வீரர் பரேஷ் நர்வால் அதிக
புள்ளிகளைக் குவித்து அணிக்கு
வெற்றி தேடித் தந்தார்.
இந்தியாவில்
திரட்டும் தகவல்களை இந்தியாவிலேயே
பாதுகாக்க சர்வதேச நிதிச்
சேவை நிறுவனங்களுக்கு ஆர்பிஐ
கெடு:
இன்று
முதல் நடைமுறைப்படுத்த
வேண்டும்
சர்வதேச
நிதிச் சேவை நிறுவனங்கள்
இந்தியாவில் திரட்டும் தகவல்
களை இந்தியாவிலேயே பாது காக்க
வேண்டும் என ரிசர்வ் வங்கி
அளித்த வழிகாட்டுதலை இன்று
முதல் நடைமுறைப்படுத்த
வேண்டும்.
இதனால்
சர்வதேச நிதிச் சேவை நிறுவனங்கள்
இன்று முதல் இதனை நடைமுறைப்படுத்தும்
கட்டாயம் உருவாகியுள்ளது.
இது
தொடர்பாக தகவலறிந்தவர் கள்
கூறுகையில்,
சர்வதேச
நிதிச் சேவை நிறுவனங்கள்
தங்களது இந்திய செயல்பாடுகளின்போது
திரட்டும் தகவல்களை இந்தியாவி
லேயே சேமிக்க வேண்டும்.
இதற்
கான கட்டமைப்பை ஆறு மாதங்
களில் உருவாக்கிக் கொள்வதற்கு
அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த
அவகாசம் இன்றுடன்(
அக்
டோபர் 15)
முடிவடைகிறது.
இந்த
விஷயத்தில் விதிமுறைகளை
தளர்த்தவோ,
அவகாசத்தை
நீட்டிக் கவோ ரிசர்வ் வங்கி
தயாராக இல்லை என்று கூறினர்.
பொது
நலன் கருதி இதனைக் கட்டாயம்
நடை முறைப்படுத்த வேண்டும்
என்று ரிசர்வ் வங்கி
குறிப்பிட்டிருந்தது.
No comments:
Post a Comment