Monday 20 August 2018

20 ஆகஸ்ட் முக்கிய நிகழ்வுகள்


உலகம்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு
இந்தோனேசியாவின் லாம்போக் தீவில்  300க்கும் மேற்பட்டவர்கள் இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட  நிலநடுக்கத்துக்குப் பலியான நிலையில் மீண்டும் அப்பகுதியில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து அந்நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தரப்பில், "இந்தோனேசியாவில் லாம்போக் தீவுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியதுஇந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஆங்காங்கே சாலைகள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்த முழுமையான பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.
இந்தோனேசியாவின் லாம்போக் தீவில்  ஆகஸ்ட் 5 ஆம் தேதி  இரவு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவுகோலில் 6.8, 7 ஆகப் பதிவாகின. 132 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன.
இந்த நில நடுக்கத்துக்கு 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.அங்கு 80 சதவீத வீடுகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்தன. இந்த நிலையில் மீண்டும் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் மரணம்
.நா.வின்  முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80.
உடல்நலக் குறைவு காரணமாக கோஃபி அன்னன் இன்று (சனிக்கிழமை) சுவிட்சர்லாந்தில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரும், அவரது அறக்கட்டளை அமைப்பும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோஃபி அன்னனின் ட்விட்டர் பக்கத்தில் அவரது அறக்கட்டளை சார்பாக , " ஐக்கிய நாடுகளின் முன்னாள் பொதுச் செயலாளரான கோஃபி அன்னன் ஆகஸ்ட் 18 ஆம் தேது உடல்நலக் குறைவினால் அவரது உயிர் அமைதியாகப் பிரிந்தது. கோஃபி அன்னா என்றும் நம் மனதில் நிலைத்திருப்பார்” என்று பதிவிடப்பட்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் 7-வது பொதுச் செயலாளாராக இருந்த கோஃபி அன்னன் 1997 முதல் 2006 வரை அந்தப் பதவியில் வகித்தார்
கானாவைச் சேர்ந்த கோஃபி அன்னன் சிரியாவுக்கு சிறப்பு தூதராகப் பணியாற்றியவர்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவர் இம்ரான் கான் வெற்றி பெற்றதையடுத்து, அந்நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றார்.

பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் 116 இடங்களைக் கைப்பற்றிய பிடிஐ கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது. நவாஸ் ஷெரீப் கட்சியின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வென்றது.
இந்தியா
தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து இதுவரை கேரளாவில் 42 சதவீதம் கூடுதல் மழை
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து இது வரை 42 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
கேரளாவில் பருவமழை தொடங்கிய ஜூன் 1-ம் தேதி முதல் நேற்று வரை (ஆகஸ்ட் 19) சரா சரியாக 2346.5 மி.மீ. மழை பெய் துள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள் ளது.
இது வழக்கமான அளவை (1649.5 மி.மீ.) விட 42 சதவீதம் அதிகம். மாவட்டவாரியாக பார்க்கும்போது அதிகபட்சமாக இடுக்கி மாவட்டத்தில் 92 சதவீதமும், பாலக்காடு மாவட்டத்தில் 72 சதவீதமும் கூடுதல் மழை பெய் துள்ளது.
கேரளாவில் சராசரியாக பார்க்கும்போது ஜூன் மாதத்தில் 15 சதவீதமும் ஜூலையில் 18 சதவீதமும் ஆகஸ்டில் (19 வரை) 164 சதவீதமும் வழக்கத்தைவிட கூடுதல் மழை பெய்துள்ளது. இவ்வாறு ஐஎம்டி புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரளாவுக்கு மேற்கு வங்க அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
வணிகம்
வெள்ளத்தால் கடுமையான பாதிப்பினை சந்தித்துள்ள கேரள மக்களுக்கு வங்கிக் பரிவர்த் தனைக் கட்டணங்களில் இருந்து விலக்கு அளிப்பதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அறிவித்துள்ளன.

விளையாட்டு
ஆசிய விளையாட்டு போட்டிகள்: துப்பாக்கிச் சுடுதலில் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப்போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் கடந்த வாரம் தொடங்கி வரும் செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில்  45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள்  கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து 572 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. ஹாக்கி, டேபிள் டென்னிஸ், வில்வித்தை, கபடி, தடகளம், மயல்யுத்தம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றில் இந்தியா பங்கேற்றுள்ளது.
இதில், மல்யுத்தப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பஜ்ரங் பூனியா  பெற்று தந்தார்.
இந்த நிலையில் இன்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இந்தியா சார்பில்  தீபக் குமார் பங்கேற்றார். இதில் 247.7 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 இதில்  249.1 புள்ளிகள் பெற்று சீனாவின் ஹாரோன் யாங்குக்கு தங்கப் பதக்கம் கிடைத்ததுசீன தைபேவின் ஷாசுவான் லூவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. அவர் பெற்ற புள்ளிகள் 205.2 . துப்பாகிச் சூடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது பதக்கம் இதுவாகும்.
முன்னதாக ரவி குமார், அபுர்வி சண்டேலா 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் வெண்கலப் பதக்கம்  வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப்போட்டியில், மல்யுத்தப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
உஸ்பெகிஸ்தான் வீரர் சிராஜுதின் கசாநோவை 13-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கத்தை வென்றார் பூனியா.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 40 விளையாட்டு போட்டிகளில் 572 பேர் பங்கேற்றுள்ளனர்.
ஜகார்த்தா விளையாட்டு மையத்தில் இன்று ஆடவருக்கான 65கிலோ ப்ரீஸ்டையில் மல்யுத்தப் போட்டி நடந்தது. இதில்
இந்தியவீரர் பஜ்ரங் பூனியாவை எதிர்த்து களமிறங்கினார்உஸ்பெகிஸ்தான் வீரர் சிராஜுதின் கசாநோவ்.
இதில் உஸ்பெகிஸ்தான் வீரர் சிராஜுதின் கசாநோவை 13-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கத்தை வென்றார் பூனியா. தங்கப்பதக்கம் வென்ற பூனியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
24வயதான பூனியா ரயில்வேதுறையில் பணியாற்றி வருகிறார். சர்வதேச அளவில் 65 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் 2-ம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment