Thursday, 23 August 2018

23 ஆகஸ்ட் முக்கிய நிகழ்வுகள்

உலகம்


இந்தியா - பாகிஸ்தான் நல்லுறவுக்கு உதவத் தயார்: சீனா அறிவிப்பு

பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதை, இந்தியப் பிரதமர் வரவேற்றுள்ளார். இதன் மூலம் இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் நல்லுறவு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இரு நாட்டு பிரதமர்கள் தெரிவித் துள்ள கருத்துகளை நாங்கள் அறிந்துள்ளோம்.தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவும், பாகிஸ்தான் முக்கியமான நாடு களாக உள்ளன. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பொதுவான அண்டை நாடாக சீனா உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற சீனா உறுதியாக ஆதரவளிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கை, சரியான முறையில் கையாளுதல், கருத்து வேறுபாடுகளை நீக்குதல் போன்றவை ஏற்படவேண்டும்.
இரு நாடுகளிடையே நல்லுறவு ஏற்பட ஆக்கபூர்வமான முறையில் பங்காற்ற சீனா தயாராக உள்ளது. பிராந்திய அளவில் அமைதி, வளர்ச்சி ஏற்பட இரு நாடுகளும் இணைந்து செயலாற்றவேண்டும்.

ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான சீன திட்டங்கள் ரத்து செய்யப்படும்:  மலேசிய பிரதமர் மகாதீர் முகமது அறிவிப்பு

சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான சீன திட்டங்கள் ரத்து செய்யப்படும் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தெரிவித் துள்ளார்.
சீனாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுடன் சாலை, ரயில், கடல் வழி போக்குவரத்தை ஏற் படுத்தும் ‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ என்ற கனவு திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள குவாதரில் பிரம்மாண்ட துறை முகத்தை சீனா கட்டியுள்ளது. சீனாவில் இருந்து குவாதருக்கு நெடுஞ்சாலையையும் அமைத்துள் ளது. இந்த நெடுஞ்சாலை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதால் இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.
‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ திட்டத்தில் மலேசியாவில் சுமார் ரூ.1.53 லட்சம் கோடி செலவில் ரயில், எண்ணெய் குழாய் திட்டங்களைச் செயல்படுத்த சீனா ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் காலத்தில் கையெழுத்தானது.

வட - தென் கொரிய எல்லைகளில் ராணுவ நிலைகளை மூட முடிவு

வட கொரியா - தென் கொரியா இடையேயான எல்லைப் பகுதி களில் உள்ள ராணுவ நிலைகளை மூடுவதற்கு இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
இதுதொடர்பாக, தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் சாங் - யூங் - மூ அந்நாட்டு நாடாளு மன்றத்தில் நேற்று கூறியதாவது:
வட கொரியா - தென் கொரியா இடையே நீண்டகாலமாக நிலவி வந்த கசப்புணர்வு தற்போது படிப் படியாக குறைந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே யான பிரச்சினைகள் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டு வருகின்றன.
இரு நாட்டு அதிபர்களும் கடந்த ஏப்ரலில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அமைதி நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வட கொரியா - தென் கொரியா இடையேயான எல்லைப் பகுதிகளில் அமைந்தி ருக்கும் ராணுவ நிலைகளை மூடுவதற்கு இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. அதன்படி, இந்த ராணுவ நிலைகள் பரஸ்பரம் படிப்படியாக வாபஸ் பெறப்படும்.

இந்தியா


மீண்டும் நிதியமைச்சரானார் அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு மீ்ண்டும் நிதித்துறையை ஒதுக்கீடு செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி மாநிலங்களவை பாஜக தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்த வந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்கு சென்றார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சில மாதங்கள் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் அவரிடம் இருந்த நிதித்துறை மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை கூடுதல் பொறுப்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு வழங்கப்பட்டது.
சிகிச்சைக்கு பின் ஒய்வெடுத்து வந்த அருண் ஜெட்லி உடல்நலம் மீண்டும் பழையபடி வழக்கமான பணிகளை கவனிக்க தொடங்கியுள்ளார். இதையடுத்து நிதி மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் காலமானார்

மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 95.
இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான குல்தீப் நய்யார், பாகிஸ்தானின் பஞ்சாப் சியால்கோட் பகுதியில் 1923-ம் ஆண்டு பிறந்தார். பத்திரிகையாளராக வாழ்க்கையை தொடங்கிய அவர் எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும் பிரபலம் ஆனார்.

விளையாட்டு


அதிகம் சம்பாதிப்பவர்களில் சிந்துவுக்கு 7-வது இடம்

உலக அளவில் அதிகம் சம் பாதிக்கும் விளையாட்டு வீராங் கனைகளில் இந்தியாவின் பாட் மிண்டன் நட்சத்திரம் பி.வி. சிந்து 7-வது இடம் பிடித்துள்ளதாக பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை பதக்கங்கள் வென்றும், விளம்பரங் கள் மூலமாகவும் அதிகமாக சம்பா தித்த விளையாட்டு வீராங்கனைக ளின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகைவெளியிட்டு உள்ளது. இதில் சிந்து 7-வது இடம் பிடித் துள்ளார். டாப்-10ல் டென்னிஸ் வீராங்கனைகள் 8 பேர் இடம் பெற்றுள்ளனர். செரீனா வில்லி யம்ஸ் 3-வது முறையாக முதலி டம் பிடித்துள்ளார். அவரது ஆண்டு வருமானம் இந்திய ரூபாய் மதிப் பில் ரூ. 125 கோடியாகும். சிந்துவின் இந்த ஆண்டு வரு மானம் ரூ. 59 கோடியாகும்.
டாப் 10-ல் டென்னிஸ் விளை யாட்டு வீராங்கனை அல்லாத மற்றொருவர் டானிகா பாட்ரிக். கார் பந்தய வீராங்கனையான இவரின் இந்த ஆண்டு வருமானம் ரூ. 52 கோடியாகும். இவர் உலக அளவில் 9-ம் இடம் பெற்றுள்ளார்.

ஆசியப் போட்டிகள் 2018: வரலாறு படைத்தார் இந்திய ‘தங்க’ வீராங்கனை ரஹி சர்னோபத்

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 25மீ ஏர்பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளார் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத்.
25மீ ஏர்பிஸ்டல் இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் நபஸ்வான் யாங்பைபூன் என்பவரை வீழ்த்தினார். இருவரும் 34 புள்ளிகளில் சமனில் இருந்த போது ஆட்டம் மிகவும் பரபரபான கட்டத்தை எட்டியது.
இதனையடுத்து ஷூட் ஆஃப் கட்டத்தின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது, இருவருமே தலா 4 முறை இலக்கைச் சரியாகச் சுட்டனர். இதனையடுத்து இன்னொரு ஷூட் ஆஃப்புக்குச் சென்றது ஆட்டம். இதில் ராஹி 3 முறை இலக்கை சரியாக குறிவைத்துச் சுட, தாய்லாந்து வீராங்கனை 2 முறையே சரியாகச் சுட்டார்.
இதனையடுத்து துப்பாக்கிச் சுடுதலில் ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற வரலாற்றை நிகழ்த்தினார் ரஹி சர்னோபத், இவர் கோலாப்பூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் வெண்கலம் வென்ற வீராங்கனை தென் கொரியாவின் கிம் மின்ஜங் ஆவார்.

ஆசிய விளையாட்டு போட்டி துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் விவசாயி மகன்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் சஞ்ஜீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 16 வயதான இந்திய வீரர் சவுரப் சவுத்ரி இறுதி சுற்றில் 240.7 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் குறைந்த வயதில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சவுரப் திவாரி. அவருக்கு தற்போது 16 வயது 101 நாட்கள் ஆகிறது. இந்த வகையில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் தாய்லாந்து வீராங்கனை தன்யாலக் 16 வயது 14 நாட்களில் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.

ஆசிய விளையாட்டு போட்டி: செபக் டக்ரா, மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் செபக் டக்ரா, மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது.
இந்தோனேஷியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. 
இதில் டென்னிஸில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா தனது 2-வது சுற்றில் ஜப்பானின் எரி ஹோஜூமியை எதிர்த்து விளையாடினார். இதில் அங்கிதா ரெய்னா 6-1, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். 25 வயதான அங்கிதா ரெய்னா, கால் இறுதி சுற்றில் ஹாங்காங்கின் யுடிஸ் சோங்குடன் இன்று மோதுகிறார்.

வணிகம்


பட்டய கணக்காளர்கள் வேலை தேட புதிய இணையதளம்: செப்டம்பர் 1 முதல் செயல்படும் என அறிவிப்பு

இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் ( ICAI) வேலைவாய்ப்பு தளத்தினை தொடங்க உள்ளது. பட்டய கணக்காளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் தங்கள் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப் பினை அதிகரிக்கும் விதமாக இந்த முயற்சியினை எடுத்துள்ளது.
இந்த வேலைவாய்ப்பு தளத் தினை செப்டம்பர் 1-ம்தேதி அறி முகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
CAjobs.com என்கிற இந்த தளத் தினை ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் கெகி மிஸ்திரி தொடங்கி வைக்க உள்ளார்.
இது தொடர்பாக இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் தலைவர் தீரஜ் குமார் கந்தேல்வால் கூறுகை யில், பட்டய கணக்காளர்களுக்கும், அவர்களது தேவை இருக்கும் நிறுவனங்களுக்கும் இணைப்பு பாலமாக இந்த தளம் இருக்கும்.
ஆகஸ்ட் 31-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ள தலைமைச் செயல் அதிகாரிகள் மாநாட்டில் இந்த இணையதளம் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
ஆடிட்டர்களை தேர்ந்தெடுப்பது நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அந்த குறையை இந்த தளம் பூர்த்தி செய்யும். இந்த தளத்தில் இந்திய பட்டய கணக்காளர்கள் பதிவு பெற்று, பல்வேறு துறைகளிலும் உள்ள 1.60 லட்சம் பேரின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 27 பைசா சரிவடைந்து 70.08 பைசாவாக குறைந்தது.
துருக்கியின் பொருளாதார சரிவின் காரணமாக அதன் நாணயமான லிரா வரலாறு காணாத சரிவினைக் கண்டுள்ளது. இதனால் அண்மைகாலமாக உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.
அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் சரிவடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 27 பைசா குறைந்தது. இதனால் காலை நேர வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு 70.08 ஆக சரிவடைந்தது.

No comments:

Post a comment