Sunday 26 August 2018

25 & 26 ஆகஸ்ட் முக்கிய நிகழ்வுகள்

உலகம்


நாட்டின் அதிபர், பிரதமர், அரசியல்வாதிகள், அதிகாரிகள் யாரும் விமான முதல் வகுப்பில் பிரயாணிக்கக் கூடாது: பிரதமர் இம்ரான் அமைச்சரவை அதிரடி

கடும் நிதிச்சிக்கல் உள்ள சூழலில் தத்தளித்து வரும் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் செலவுகளைக் குறைக்க பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், நாட்டின் அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் அரசு கஜானாவிலிருந்து செலவழித்து விமான முதல் வகுப்பில் பிரயாணம் செய்யக் கூடாது என்று தடை விதித்துள்ளது பிரதமர் இம்ரான் அமைச்சரவை.

பிரதம இம்ரான் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் பிரதமரும் அயல்நாட்டு, உள்நாட்டுப் பயணங்களுக்கு தனிவிமானத்தைப் பயன்படுத்தி அரசின் பணத்தை வீணடிக்கக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
“அனைத்து முதன்மை அரசு அதிகாரிகள், அதிபர், பிரதமர், தலைமை நீதிபதி, செனட் சேர்மன், தேசிய மக்களவையின் சபாநாயகர், முதலமைச்சர்கள் ஆகியோர் பிசினஸ் கிளாஸில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா

பாலஸ்தீனத்துக்கு அளிப்பதாக அறிவித்த நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், "பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா பகுதிகளில் நிர்வாகம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றை மேம்படுத்த அமெரிக்கா அளிப்பதாக இருந்த நிதியுதவியை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்புக் கொண்டு கூறினார்” என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த 1948 மே மாதம் இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் பகுதி இஸ்ரேல் வசமும் கிழக்கு ஜெருசலேம் ஜோர்டான் கட்டுப்பாட்டின் கீழும் வந்தன. அதன்பிறகு 1967-ல் நடந்த அரபு போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது.
பின்னர் ஒட்டுமொத்த ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அந்த நாட்டு அரசு அறிவித்தது. ஆனால் இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்பட்டன.

விளையாட்டு


இந்தியாவுக்கு 7-வது தங்கம்: குண்டு எறிதல் பிரிவில் தேஜீந்தர் சிங் தூர் சாதனை

இந்தோனேசியாவில் நடந்துவரும் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் இந்திய வீரர் தேஜீந்தர் சிங் தூர் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் டிராக் மற்றும் பீல்ட் பிரிவு போட்டிகள் இன்று நடந்தன. இதில் ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டி நடந்தது.
இந்தியா சார்பில் போட்டியிட்ட 23 வயது வீரர் தஜேந்திர பால் சிங் 20.75 மீட்டர் தொலைவு குண்டு எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். தனக்குக் கிடைத்த முதலாவது வாய்ப்பில் 19.96 மீட்டர் தொலைவுக்கு தேஜீந்தர் சிங் தூர் எறிந்து முன்னிலைப் பெற்றார். 2-வது வாய்ப்பில் அதைக்காட்டிலும்குறைந்து 19.15 மீட்டர் மட்டுமே குண்டு வீசினார்.

ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீராங்கனைகள், ஜோஸ்னா, தீபாவுக்கு வெண்கலம்

இந்தோனேசியாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பாலிகல் ஆகியோர் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்கள்.
18-வது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடந்து வருகிறது. ஸ்குவாஷ் விளையாட்டில் மகளிருக்கான ஒற்றையர் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடந்தன.

வணிகம்


ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் கோடி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.8 லட்சம் கோடி சந்தை மதிப்பினை தொட்டுள்ளது. முதன் முதலில் இந்த இலக்கினை தொட்ட முதல் இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் ரிலை யன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1.78% ஏற்றம் கண்டது. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,268 கோடி உயர்ந்தது. இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒட்டுமொத்தமாக ரூ. 8 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இந்தியாவில் ரூ.8 லட்சம் கோடி சந்தை மதிப்பினை கடந்த முதல் நிறுவனமாக ரிலையன்ஸ் உருவாகியுள்ளது.
நேற்று மதியத்துக்கு பின்னர் இதன் சந்தை மதிப்பு ரூ.8,04,247.76 கோடியாக இருந்தது.முன்னதாக ஜூலை 13ம் தேதி ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.7 லட்சம் கோடியாக உயர்ந் திருந்தது.

No comments:

Post a Comment