Tuesday, 28 August 2018

28 ஆகஸ்ட் முக்கிய நிகழ்வுகள்

உலகம்

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி; காயம் 300

ஈரானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 2 பேர் பலியாகினர். 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தரப்பில், "ஈரானில் கெர்மன்ஷா மாகாணத்தில் இராக் எல்லையை ஓட்டிய பகுதியில் அமைந்துள்ள டாசியாபாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியது. இதனால் அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்கெயின் மரண அஞ்சலியில் ட்ரம்ப் அடாவடி: அரைக்கம்பத்தில் பறந்த அமெரிக்க தேசியக்கொடியை முழுக்கம்பத்தில் ஏற்றி குழப்பம்

அமெரிக்காவில் ஆளும் குடியரசு கட்சியின் மூத்த தலைவரான மறைந்த ஜான் மெக்கெயின் மரணத்துக்கு அந்நாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டுவரும் நிலையில், அவர் மீதான காழ்புணர்ச்சியால், அதிபர் ட்ரம்ப், தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு பின், முழுக்கம்பத்தில் ஏற்றி குழப்பம் ஏற்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாம் போரில் சிறை சென்றவரும், அமெரிக்க அதிபர் பதவிக்கு இருமுறை போட்டியிட்டவரும், அரிசோனா மாநில செனட் உறுப்பினருமான ஜான் மெக்கெயின் (வயது 81) உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்தியா


கேரளாவில் ராகுல் காந்தி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்

ஜான் மெக்கெயினுக்கு மூளைப் புற்றுநோயான கிளிபோஸ்டோமா எனும் நோய் கடந்த 2017 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மரணமடைந்தார்.
அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான போரின்போது, வியட்நாம் ராணுவ அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட கடற்படை அதிகாரியான மெக்கெயின் 5 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அமெரிக்காவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான மெக்கெயின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது இறுதிச்சடங்கு செப்டம்பர் 2-ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்கெயினும், அதிபர் ட்ரம்ப்பும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். எனினும் கடந்த காலங்களில் பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல்கள் நடந்துள்ளன.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தபோது, ட்ரம்பை மெக்கெயின் கடுமையாக விமர்சித்தார். குடியரசுக் கட்சி வேட்பாளராக ட்ரம்ப் நிறுத்தப்படுவதற்கு மெக்கெயின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, மெக்கெயின் போர் நாயகன் எல்லாம் இல்லை. அவர் ஒரு மோசடி நபர்’’ என அவரை கடுமையாக தாக்கி ட்ரம்ப் பேசினார்.

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் இதனை அறிவித்தார். 

விளையாட்டு


இறுதிப் போட்டியில் நுழைந்து வரலாறு படைத்தார் சிந்து: பதக்கம் வென்று சாய்னாவும் சாதனை

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 9-வது நாளான நேற்று பாட்மிண்டனில் மகளிர் ஒற்றை யர் பிரிவு அரை இறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான இந்தியா வின் பி.வி.சிந்து, 2-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்த்து விளையாடினார்.
சுமார் ஒரு மணி நேரம் 5 நிமி டங்கள் நடைபெற்ற இந்த ஆட் டத்தில் சிந்து 21-17, 15-21, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன் னேறினார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு பாட்மிண்டன் வர லாற்றில் இறுதிப் போட்டிக்கு முன் னேறிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் 23 வயதான சிந்து.

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி: ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா; தடகளத்தில் தமிழகத்தின் தருண் உட்பட 3 பேர் வெள்ளி வென்று அசத்தல்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். தடகளத்தில் இந்தியாவுக்கு மேலும் 3 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தது.
இந்தோனேஷியாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறி தலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.06 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர், ஆசிய விளையாட்டில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் 1982-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக குர் தேஜ் சிங் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
சீனாவின் லியு கிஸ்ஹென் (82.22) வெள்ளிப் பதக்கமும், பாகிஸ் தானின் அர்ஷத் நதீம் (80.75) வெண்கலப் பதக்கமும் பெற்றனர். நீரஜ் சோப்ராவுக்கு கடும் அச் சுறுத்தலாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சீன தைபேவின் சாவோ சுன் ஷெங் (79.81) 5-வது இடத்தையே பிடித்தார். கடந்த ஆண்டில் அவர், 91.36 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


வணிகம்


டாடா மோட்டார்ஸை பின்னுக்கு இழுக்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர்

யானைக்கும் அடி சறுக்கும் என்பது எதார்த்தம். இப்போது ஜாகுவாருக்கு அடி சறுக்கியிருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வருவாயை ஈட்டித் தரும் முக்கிய பிராண்ட் ஜாகுவார் லேண்ட் ரோவர்.
டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமாக இங்கிலாந்தில் செயல்பட்டு வருகிறது. இதன் விற்பனை கடந்த காலாண்டில் கணிசமாக சரிந்துள்ளதுடன், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நடப்பாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.1,902 கோடி நஷ்டத்தினை ஜாகுவார் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.3,182 கோடி லாபம் ஈட்டிய நிறுவனம் என்பது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a comment