Thursday 30 August 2018

30 ஆகஸ்ட் முக்கிய நிகழ்வுகள்

உலகம்

வெளியேறுகிறார் வெள்ளை மாளிகை ஆலோசகர்

வெள்ளை மாளிகையின் ஆலோசகராக இருக்கும் டான் மெக்கன் தனது பதவியிலிருந்து விடைபெற இருக்கிறார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெள்ளை மாளிகையின் ஆலோசகர் டான் மெக்கன் கூடிய விரைவில் விடை பெற்று உச்ச நீதிமன்றத்தில் பதவி பெறப் போகிறார். டானுடன் நான் நீண்ட காலம் பணிபுரிந்து இருக்கிறேன். அவரது பணிகளை உளமாறப் பாராட்டுக்கிறேன் "என்று பதிவிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் நிர்வாகப் பணிகளில் ஆலோசகர் மாற்றப்படுவது இயல்பானது என்றாலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணை நடந்து வருகிறது.
இதில் மெக்கனின் செயல்பாடு அதிருப்தி அளிக்கு வகையில் உள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் செய்திகள் வெளியான நிலையில் மெக்கனின் வெளியேற்ற முடிவை ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் கடந்த 7-ம் தேதி காலமானார்.
கருணாநிதியின் மறைவுக்கு இலங்கை உட்பட பல நாடுகளும் அஞ்சலி செலுத்தின.இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டேனி கே டெவிஸ் ஆகஸ்ட் 24 ஆம் தேதி கொண்டு வந்திருக்கிறார்.

இந்தியா


அதிக பாதுகாப்பு அம்சம் நிறைந்த புதிய 500, 2000 ரூபாய்களில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிப்பு அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி அறிக்கையில் தகவல்

அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது, போலியாகத் தயாரிக்க முடியாது என்று கூறி பல வண்ணங்களில் வெளியிடப்பட்ட ரூ.500, ரூ.2000 நோட்டுகளில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டில் கள்ளநோட்டு, தீவிரவாதம், கறுப்புப் பணம் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டு வந்தார்.
அதன்பின் கள்ளநோட்டுகள் அச்சடிக்க முடியாத வகையில், அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய வடிவத்தில் ரூ.500, ரூ.2000, ரூ.200, ரூ.50, ரூ.10 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வரிசையாக வெளியிட்டது.
இந்நிலையில், கள்ளநோட்டுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை, புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டும் தோல்வி அடைந்துள்ளது ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

உ.பி.யில் புதிய கட்சியை தொடங்குகிறார் ஷிவ்பால் சிங்

உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் சிங் யாதவின் சித்தப்பாவும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஷிவ்பால்சிங் யாதவ் (61) புதிய கட்சி தொடங்கவுள்ளார்.
உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்தது. இதில் முதல்வர் அகிலேஷ் - ஷிவ்பால் யாதவ் இடையே கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், தனது தம்பி ஷிவ்பாலுக்கு ஆதரவாக இருந்தார். இதனால், கட்சியில் பிளவு ஏற்பட்டது.
இந்தப் பிரச்சினையில் அகிலேஷ் அணியே சமாஜ்வாதி கட்சி என தேர்தல் ஆணையம் கூறியது. இதன் பிறகு சமாதானம் அடைந்த ஷிவ்பால், உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷுடன் இணைந்திருந்தார். எனினும், அவருக்கு முன்பு போல் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்திருந்த ஷிவ்பால் தற்போது புதிய கட்சி தொடங்கி, சமாஜ்வாதி மதச்சார்பற்ற முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார்.

விளையாட்டு


48 ஆண்டுகளுக்குப் பின் சாதனை: ‘டிரிபிள் ஜம்ப்’ பிரிவில் அர்பிந்தர் சிங்குக்கு தங்கம்: ஸ்வப்னா பர்மான் புதிய வரலாறு

ஜகார்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 48 ஆண்டுகளுக்குப் பின் டிரிபிள் ஜம்ப் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
இந்திய வீரர் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் தொலைவு தாண்டித் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஜகார்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடந்த ஆடவருக்கான டிரிபிள் ஜம்ப் தடகளப் போட்டியில், இந்திய வீரர் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் தொலைவு தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார். முதல் இரு வாய்ப்புகளில் தவறுகள் செய்த அர்பிந்தர் சிங் 3-வது வாய்ப்பில் சிறப்பாகச் செயல்பட்டு தங்கப்பதக்கத்தை வென்றார்.
இதற்கு முன் கடைசியாக 1970-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் மொகிந்தர் சிங் கில் டிரிபிள் ஜம்ப் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். அதன்பின் 48 ஆண்டுகளுக்குப்பின் இப்போது இந்தியா தங்கம் வென்றது.

வணிகம்


5 நாடுகள் இணைந்து உருவாக்கிய பிரிக்ஸ் வங்கிக்கு ஏஏ பிளஸ் தரச்சான்று

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புதிய மேம்பாட்டு வங்கிக்கு (என்டிபி) ஏஏ பிளஸ் தரச்சான்று வழங்கப் பட்டுள்ளது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப் பிரிக்கா ஆகிய நாடுகள் (பிரிக்ஸ்) இணைந்து உருவாக் கிய வங்கிதான் என்டிபி எனப்படும் புதிய மேம்பாட்டு வங்கியாகும்.
இதற்கு முதுபெரும் வங்கி யாளர் கே.வி. காமத் தலைவ ராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
2014-ம் ஆண்டு வங்கி தொடங்க திட்டமிடப்பட்டு 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் செயல்பட ஆரம்பித்தது.
சர்வதேச தரச்சான்று நிறு வனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் (எஸ் அண்ட் பி) நிறு வனம் இந்த வங் கிக்கு ஏஏ பிளஸ் தரச் சான்றை வழங்கியுள்ளது. வங்கிகளுக்கான தரச்சான்றில் மிகவும் முதன்மையானது ஏஏஏ ஆகும். இதற்கு அடுத்து ஏஏ பிளஸ் உள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் பிட்ச் தரச்சான்று நிறுவனமும் என்டிபி-க்கு ஏஏ பிளஸ் தரச்சான்றை அளித்தது குறிப்பிடத்தக்கது.

பங்குகளை கைப்பற்றுவதற்கு எதிராக மனு தாக்கல்  ஐடிபிஐ வங்கி - எல்ஐசி நிறுவனம் விவகாரத்தில் சட்ட சிக்கல் 

ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி நிறுவனம் பெரும்பான்மை பங்கு களை வாங்குவதற்கு எதிராக அனைத்திந்திய ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சட்ட சிக்கல் எழுந்துள்ளது.
அடுத்தகட்ட விசாரணை நடை பெறும்வரை ஐடிபிஐ வங்கியில் பங்குகள் வாங்குவது தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் எல்ஐசி ஈடுபடக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அதிகாரிகள் கூட்ட மைப்பின் மனுவுக்கு விளக்கம் அளிக்கக்கோரி எல்ஐசி நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி நிறு வனம் பங்குகளை வாங்கும் விவ காரத்தில் முதலீட்டு ஒழுங்குமுறை கள் ஏன் தளர்த்தப்பட்டுள்ளன என்று நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

No comments:

Post a Comment