Saturday 1 September 2018

1 செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்

உலகம்

பாலஸ்தீன அகதிகளின் நிதியை நிறுத்திய அமெரிக்கா
பாலஸ்தீன அகதிகளுக்கு பல வருடங்களாக வழங்கி வந்த உதவித்தொகையை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "ட்ரம்ப் நிர்வாகம் ஆழமான வருத்தம் மற்றும் ஏமாற்றத்தை அடைந்துள்ளது. நாங்கள் இனி ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்த அகதிகளுக்கான நிதித் தொகை மற்றும் இதர மறுகட்டமைப்புப் பணிகளுக்கான நிதியை நிறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவின் மூலம் கிட்டத்தட்ட பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளின் அகதிகளுக்காக அமெரிக்கா வழங்கவிருந்த 300 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தியுள்ளது.

இந்தியா


மிஸ் யுனிவர்ஸ் 2018: இந்தியாவின் சார்பாக மும்பை பெண் நேஹல் சூதாசமா போட்டி
பாங்காங்கில் டிசம்பரில் நடைபெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் 2018 போட்டியில் பங்கேற்க மும்பைப்பெண் நேஹல் சூதாசமா இந்தியா சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு, மும்பையில் இதற்கான தேர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஜூரியாகப் பொறுப்பு வகித்த, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையைச் சேர்ந்த நேஹல் சூதாசமா வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
இறுதி நிகழ்வில் சென்ற ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்ற ஷ்ரதா சஷிதர், நேஹலுக்கு முடிசூட்டினார்.
நேஹலுக்கு வயது 21, இவருக்கு உடற்பயிற்சி, தடகளம், நடனம் மற்றும் சமையலில் ஆர்வம் அதிகம். 'கடின உழைப்புக்கு மாற்று எதுவும் இல்லை' என்பது இவருக்குப் பிடித்த வாசகமாம்.
ஜெய்ப்பூரில் இருந்து அதிதி ஹுண்டியா மிஸ் யுனிவர்ஸ் சப்ரானேஷன் 2018, மற்றும் - இரண்டாவது இடத்தில் லக்னோவின் ரோஷினி ஷெரோன் தேர்வாகியுள்ளனர்.

விளையாட்டு


ஆசிய விளையாட்டில் இந்தியா புதிய சாதனை: குத்துச்சண்டையில் ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்திய இந்திய வீரருக்கு தங்கம்; சச்சின் வாழ்த்து
ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனும், உஸ்பெகிஸ்தான் வீரருமான ஹசன்பாய் டஸ்மட்டோவை வீழ்த்தி இந்திய வீரர் அமித் பங்கல் தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஆசிய விளையாட்டில் குத்துச் சண்டைப் பிரிவில் தங்கம் வென்ற 8-வது வீரர் எனும் சிறப்பை அமித் பங்கல் பெற்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் இந்தியாவின் பதக்கம் 67-ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு முன் கடந்த 2010-ம் ஆண்டு சீனாவின் குவாங்ஜூ நகரில் நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 65 ஆக இருந்தது. அதற்கு அடுத்தாற்போல் இப்போதுதான் மிக அதிகமாக 67 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இன்னும் பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று இருப்பதால், போட்டியின் முடிவில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்


வட்டியை உயர்த்தியது ஸ்டேட் வங்கி: வீட்டுக்கடன் வட்டி விகிதம் உயர்கிறது
நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கடனுக்கான வட்டி விகிதத்தை 0.2 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால், வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்கிறது.
ரிசர்வ் வங்கி கடனுக்களுக்கான அடிப்படை வட்டிவிகிதத்தை ஜூன் மாதத்தில் 0.25 சதவீதம் உயர்த்தியது. இதன் மூலம் அடிப்படை வட்டி விகிதம் 6.25 சதவீதமாக நிர்யணிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.2 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த வட்டி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
எம்எல்சிஆர் அடிப்படையிலான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும் நிலையில் ஒரு மாத எம்எல்சிஆர் அடிப்படையிலான வட்டி விகிதம் 7.9 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமக உயர்த்தப்பட்டள்ளது.

No comments:

Post a Comment