Tuesday 4 September 2018

4th செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்

உலகம்

ஆப்கன் ஹக்கானி தீவிரவாத குழுவின் தலைவர் ஜலாலுதீன் மரணம்

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த ஹக்கானி தீவிரவாத குழுவின் தலைவர் ஜலாலுதின் ஹக்கானி இறந்துவிட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டுவருகிறது ஹக்கானி தீவிரவாத அமைப்பு. ஆப்கானிஸ்தானில் பல்வேறு வெடி குண்டு சம்பவங்கள், தூதர தாக்குதல்களில் இந்த அமைப்ப்பு ஈடுபட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு மிகுந்த அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வந்த ஹக்கானி தீவிரவாத அமைப்பை 1970 ஆம் ஆண்டு நிறுவியவர் ஜலாலுதின். சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஹக்கானி அமைப்பின் துணை தலைவர் பதவி, அவரது மகனான சிராஜூதீன் ஹக்கானியிடம் வழங்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு ரூ.2,100 கோடி ராணுவ உதவி ரத்து: அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

தீவிரவாதக் குழுக்களான ஹக்கானி நெட்வொர்க், லஷ்கர் இ தொய்பா ஆகியவற்றுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததையடுத்து, அந்த நாட்டு ராணுவத்துக்கு வழங்க இருந்த ரூ.2,100 கோடி(30 கோடி டாலர்) உதவியை ரத்து செய்து அமெரிக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது
இதனால் பாகிஸ்தான், அமெரிக்கா இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், வரும் 5-ம் தேதி அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கானை சந்தித்துப் பேச உள்ள நிலையில், அமெரிக்கா ராணுவ உதவியை ரத்து செய்து திடீரென அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தீவிரவாதக் குழுக்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வளர்த்து வருகிறது பாகிஸ்தான் என்று நீண்டகாலமாகவே அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாகவே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒபாமா காலத்திலேயே உரசல் இருந்தது.

இந்தியா


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு ரஞ்சன் கோகோயை பரிந்துரைத்தார் தீபக் மிஸ்ரா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, புதிய தலைமை நீதிபதி பதவிக்கு ரஞ்சன் கோகோயின் பெயரை மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இப்போதைய தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் அக்டோபர் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. பணியில் இருந்து ஓய்வுபெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்து அந்தப் பதவிக்கு தகுதியானவரின் பெயரை பணி மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதன்படி உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார் தீபக் மிஸ்ரா.
மத்திய அரசு அவரின் பரிந்துரையை ஏற்கும் பட்சத்தில் அக்டோபர் 3-ம் தேதி ரஞ்சன் கோகோய் குடியரசுத் தலைவர் முன்னிலையில் பதவியேற்பார்.


விளையாட்டு


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் நடால், செரீனா

ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 6-3, 6-3, 6-7 (6-8), 6-4 என்ற செட் கணக்கில் 37-ம் நிலை வீரரான ஜார்ஜியாவின் நிக்கோலஸ் பஸிலஷ்விலியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னே றினார். அமெரிக்க ஓபனில் நடால் கால் இறுதிக்கு முன்னேறுவது இது 8-வது முறையாகும். கால் இறுதியில் நடால், 9-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை எதிர்கொள்கிறார்.
டொமினிக் தியம் 4-வது சுற்றில் 5-ம் நிலை வீரரான தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை 7-5, 6-2, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் 3-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் மார்ட் டின் டெல்போட்ரோ 6-4, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் 20-ம் நிலை வீரரான குரோஷியாவின் போர்னா கோரிக்கையும், 11-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 3-6, 6-3, 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் 25-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிச்சையும் வீழ்த்தி கால் இறுதியில் கால்பதித்தனர். கால் இறுதியில் இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.

வணிகம்


வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி: டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு கடும் சரிவு

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு டாலருக்கு எதிராக கடும் சரிவை இன்று சந்தையில் எதிர்கொண்டது.
வர்த்தகம் முடியும் போது, டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு முந்தை மதிப்பான 71 ரூபாயில் இருந்து 21 காசுகள் சரிந்து ரூ.71.21 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, எந்தவிதமான சலனமில்லாமல் ரூபாயின் மதிப்பு நிலையானதாக இருந்தது, ஆனால், நண்பகலு்ககு பின் பல்வேறு சர்வதேச காரணிகள் காரணமாக, முதலீட்டாளர்கள் டாலரை அதிக அளவில் வாங்கத் தொடங்கினார்கள்.
இதனால், டாலரின் தேவை அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு விரைவாக சரியத் தொடங்கியது, மத்திய அரசு தலையிடும் முதலீட்டாளர்களின் அச்சத்தைப் போக்க முடியவில்லை.

No comments:

Post a Comment