Thursday 6 September 2018

6th செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்

உலகம்

இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாகச் சரிந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய், விமானம் கூடுதலாக இறக்குமதி செய்ய நெருக்கடி கொடுக்கும் ட்ரம்ப் நிர்வாகம்

அடுத்த 3 ஆண்டுகளுக்கு 10 பில்லியன் டாலர்கள் கூடுதல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கு டோனல்ட் ட்ரம்ப் தலைமை அமெரிக்க அரசு கடும் நெருக்கடி கொடுத்து வருவதால் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இழுபறி நிலையில் உள்ளன.
இது தொடர்பாக இன்று இருதரப்பு விவாதம் டெல்லியில் நடைபெறுகிறது. ட்ரம்ப் நிர்வாகத்தில் உள்ள பொருளாதார தேசியவாதிகள் இந்தியாவுக்கு வர்த்தக ரீதியாக இத்தகைய நெருக்கடிகளை அளிக்கின்றனர்.

தமிழக ஆசிரியை உட்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசு துணைத் தலைவர் வழங்கினார்
தமிழக ஆசிரியை ஆர்.ஸதி உட்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.
மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் மிகச் சிறப்பாக பணியாற்றிய 45 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில், கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் உள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஸதியும் (46) ஒருவர்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று முன் தினம் 45 ஆசிரியர்களுடனும் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து டெல்லியில் நேற்று நடந்த விழாவில் 45 பேருக்கும் தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

சர்வதேச துப்பாக்கிச் சூடுதல் ஜூனியர் பிரிவு சாம்பியன்ஷிஃப்: தங்கம் வென்றார் சவுரப் சவுத்ரி
சர்வதேச துப்பாக்கிச் சூடுதல் ஜூனியர் பிரிவுக்கான சாம்பியன்ஷிஃப் போட்டியில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார்.

சர்வதேச துப்பாக்கிச் சூடுதல் ஜூனியர் பிரிவுக்கான சாம்பியன்ஷிஃப் போட்டிகள் தென்கொரியாவின் சாங்வோன் நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார்.

ரூ. 4.2 லட்சம் கோடி செலவில் 100 புதிய விமான நிலையங்கள் கட்ட திட்டம்: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்
இந்தியாவில் 100 புதிய விமானங்கள் கட்ட திட்டமிட்டி ருப்பதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். 
மொத்தம் 6,000 கோடி டாலர் சுமார் ரூ. 4.20 லட்சம் கோடி செலவில் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கத் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறினார்.
இந்தியாவில் மிகவும் வேக மாக வளரும் துறையாக விமான போக்குவரத்து திகழ்கிறது. கடந்த 50 மாதங்களாக இரட்டை இலக்க வளர்ச்சியை இத்துறை எட்டி வந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். விரைவான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் அடுத்த 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகளுக்குள் 100 விமான நிலையங்கள் கட்டப்படும். இந்த விமான நிலையங்கள் அனைத்துமே அரசு மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் நிறைவேற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார். சரக்கு போக்கு வரத்துக்கென தனிக் கொள்கை வகுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment