Monday, 14 January 2019

12th January Current Affairs in Tamil

  • சாலை விதிகளை மீறி செயல்படுபவர்களை பற்றி புகார் அளிக்க உதவுவதற்காக, “போலீஸ் இ-கண்” (Police E-Eye App) என்ற செயலியை கோயம்புத்தூர் நகர போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இச்செயலியை ஏவியன் இன்ஃபோடெக் (Aveon Infotech Ltd) என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. 

  • இந்தியாவின் மிக நீண்ட ஒற்றை பாதை கேபிள் பாலமான (India’s Longest Single Lane Steel Cable Suspension Bridge) பியொருங் பாலமானது (BYORUNG – BRIDGE) அருணாச்சல பிரதேசத்தின் சியாங் நதியின் குறுக்கே கட்டப்பட்டு, அம்மாநில முதல்வர் பீமா காண்டு-வால் திறந்து வைக்கப்பட்டது.

  • சமூக ஊடகங்களில் “மாற்றத்தை உண்டாக்கும் பெண்களை” அறிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், “WEB WONDER WOMAN” என்ற ஆன்லைன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
  • உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு 2019 (GAS – 2019 ) ஜனவரி 15 மற்றும் 16ம் தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது.
  • GAS – 2019 (Global Aviation Summit) மாநாட்டின் கருப்பொருள் – “Flying For All” என்பதாகும்.

  • சர்வதேச கிரிக்கெட் சங்க கவுன்சிலின் (ICC) 105வது உறுப்பினராக அமெரிக்கா இணைந்துள்ளது.

  • ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின், மாநில சட்ட ஆணையத் தலைவராக M.K. ஹஞ்சுரா (M.K. Hanjura) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
  • இந்தியாவின் 21வது சட்ட ஆணையத் தலைவர் (தற்போது) – B.S. சௌகான் என்பது குறிப்பிடத்தக்கது.

  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, 2018 – 2019ஆம் ஆண்டு காலகட்டத்தில் 7.3 சதவீதமாகவும், 2019 – 2020ஆம் ஆண்டுகளில் 7.5 சதவீதமாகவும் வளர்ச்சி அடையும் என உலக வங்கி கணித்துள்ளது.
  • உலக வங்கியானது 1944ல் உருவாக்கப்பட்டது அதன் தலைமையகம் வாஷிங்டன் டிசி – யில் உள்ளது.


No comments:

Post a Comment