Monday, 14 January 2019

14th January Current Affairs in Tamil


  • உலக வங்கி நிதி உதவியுடன், தமிழகத்தில் நீர், நில மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அமெரிக்க கர்னெல் பல்கலைக்கழகத்துடன் தமிழக அரசானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.



  • வறுமையை ஒழித்து அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் அடிப்படை வருமானம் அளிப்பதற்காக, சிக்கிம் மாநிலமானது “உலக அடிப்படை வருமானம்” (Universal Basic Income) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
  • இத்திட்டமானது 2022ம் ஆண்டிற்குள் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டது.


  • மனிதனை விண்ணிற்கு செலுத்தும் இஸ்ரோவின் “ககன்யான் திட்ட” செயல்பாட்டின் ஒரு பகுதியாக, மனித விண்வெளி விமான மையம் (Human Space Flight Centre) பெங்களுரில் இஸ்ரோ அமைத்துள்ளது.
  • தலைவர் – உன்னிகிருஷ்ணன் நாயர் (Unnikrishnan Nair)
  • 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு பெண் உட்பட 3 விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – சென்னையைச் (IIT – சென்னை) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நீர் மூலக்கூறுகளின் உதவியுடன் கார்பன் டை ஆக்ஸைடுகளை படிக வடிவத்தில் அமைத்து விண்வெளி எரிபொருளை உருவாக்கியுள்ளனர்.
  • இதன் மூலம், எதிர்காலத்தில் பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்த உதவும்.


  • நேபாள இராணுவத்தின் தலைமை தளபதி “பூர்ண சந்திரா தாபா” (Purna Chandra Thaba) – விற்கு இந்திய இராணுவத்தின் சார்பில், இந்திய ராணுவ ஜெனரல் விருது வழங்கப்பட்டுள்ளது.


  • தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பொதுச் செயலாளராக “ஜெயதீப் கோவிந்த்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் – H.L. தத்து
  • தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு – 1993 அக்டோபர் 12
  • தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் – மீனாகுமாரி
  • தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் கொண்டுவரப்பட்ட நாள் – ஏப்ரல் 17, 1997


  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) உறுப்பினராக முன்னாள் தலைமை புள்ளியியலாளர் டி.சி.ஏ. ஆனந்த் (T.C.A. Anant) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • UPSC-யில் தலைவர் உள்பட 10 உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • UPSC-ன் தற்போதைய தலைவர் – அரவிந்த் சக்சேனா (Aravind  Saxena)


  • தேசிய இளைஞர்கள் தினம் – 12 ஜனவரி
  • விவேகானந்தரின் பிறந்தநாளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் நாள் தேசிய இளைஞர் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
  • இத்தினமானது 1984ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
  • சர்வதேச இளைஞர் தினமானது ஆகஸ்ட் 12ம் நாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment