Friday, 31 August 2018

31 ஆகஸ்ட் முக்கிய நிகழ்வுகள்

உலகம்

உலக வர்த்தக அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறும்: ட்ரம்ப் மிரட்டல்

உலக வர்த்தக அமைப்பில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் அதிலிருந்து அமெரிக்கா விலகும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் நடத்த நேர்காணல் ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசும்போது, "ஒருவேளை உலக வர்த்தக அமைப்பில் மாற்றங்களை கொண்டு வரவில்லை என்றால் அமெரிக்கா வெளியேறிவிடும். இதுவரை செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் மோசமான ஒப்பந்தம் இதுவாகும்” என்று விமர்சித்துள்ளார்.

பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் மோடி

இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் பிம்ஸ்டெக் மாநாடு நேபாளத்தில் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று ( வியாழக்கிழமை) நேபாளம் சென்றடைந்தார். அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் இஷ்வோர் போக்ரெல் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து மோடி கூறும்போது, "வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன். மேலும் நேபாள பிரதமர் கேபி ஷர்மாவிடம் இருதரப்பு உறவுக் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

இந்தியா


கங்கை நதி மார்ச் 2020-ல் முழுமையாக சுத்தமாகும்: நிதின் கட்கரி உறுதி

கங்கை நதி மார்ச் 2020-ல் முழுமையாக சுத்தமாகும் என்று மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய கட்கரி, ''நமாமி கங்கை திட்டத்தின் கீழ் செயல்படும் 221 திட்டங்களும் முடிவடையும் தறுவாயில் உள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.22,238 கோடி ஆகும்.
வேலைவாய்ப்பில் எஸ்சி, எஸ்டி வகுப்பினர் வேறு மாநிலத்தில் சலுகை பெற முடியாது: உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு
‘‘ஒரு மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி என்று வகைப்படுத்தப்பட்டவர், வேறு மாநிலத்தில் அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கோர முடியாது’’ என்று உச்ச நீதிமன்றத் தின் 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஒரு மாநிலத்தில் எஸ்சி அல்லது எஸ்டி வகுப்பினராக உள்ளவர், வேறு மாநிலத்தில் அவருடைய சாதி எஸ்சி, எஸ்டி.யாக அறிவிக்கப்படாத நிலையில் அந்த மாநிலத்தில் அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பெற முடியுமா என்று கேள்வி எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த எஸ்சி, எஸ்டி வகுப்பி னர் டெல்லியில் அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கோர முடியுமா என்று கேள்வியும் எழுப் பப்பட்டிருந்தது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசிய லமைப்பு அமர்வு விசாரித்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.பானுமதி, எம்.சந்தானகவுடர், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

விளையாட்டு


ஆசிய விளையாட்டு: 1500மீ ஓட்டத்தில் ஜான்ஸனுக்கு தங்கம்; தொடர் ஓட்டத்தில் இந்திய மகளிர் அபாரம்

ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் ஜின்ஸன் ஜான்ஸனும், தொடர் ஓட்டத்தில் இந்திய மகளிர் அணியும் தங்கப் பதக்கம் வென்றனர்.
இதன் மூலம் ஆசியப் போட்டியில் இந்தியவின் தங்க வேட்டை 12-ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியா தலைநகர் ஜகாரத்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் நடந்து வருகின்றன. ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டம் நடந்தது. இதில் இந்திய வீரர் ஜின்ஸன் ஜான்ஸன் 3 நிமிடங்கள் 44 வினாடிகள் 72 மைக்ரோ வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
அதேசமயம், இந்தப் போட்டியில் கலந்து கொண்ட 800 மீட்டர் ஓட்ட சாம்பியன் மன்ஜித் சிங், 4-வது இடத்தையே பிடித்தார். ஈரான் வீரர் அமிர் மொராடி 3 நிமிடங்கள் 45 வினாடிகள், 62 மைக்ரோ நொடிகள் வந்து வெள்ளிப்பதக்கத்தையும், பஹ்ரைன் வீரர் முகமது தியோலி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

வணிகம்


இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய வீழ்ச்சி: கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று, இதுவரை இல்லாத அளவு கடுமையாக சரிந்தது. முதன்முறையாக ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
துருக்கியின் பொருளாதார சரிவின் காரணமாக அதன் நாணயமான லிரா கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அண்மைகாலமாக உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.

No comments:

Post a comment